பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி இந்த ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் பாதிக்கப்பட்டது தான்.
பாகிஸ்தானின் இதயம் பஞ்சாப் என்று சொல்வார்கள்.
பாகிஸ்தான் ராணுவ தளபதிகள் ஆட்சியாளர்கள் பெரும்பாலும் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள்.
1971 முதல் இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த எந்த போரிலும் பஞ்சாப் மாகாணம் பாதிக்கப்படவில்லை.
1999-ஆம் ஆண்டு கார்கில் யுத்தத்தின் போது கூட இந்திய ராணுவத்தின் நடவடிக்கை லடாக்குடன் நிறுத்திக் கொண்டது.
.அப்போது கூட அவர்கள் பஞ்சாப்பை கண்டு கொள்ளவில்லை. இந்த முறை பஞ்சாப்பை குறி வைத்ததற்கு காரணம் ஆட்சியாளர்கள் அதிகாரிகளின் பஞ்சாப் பாசத்தை சுக்குநூறாக்க வேண்டும் என்று திட்டமிட்டு நடவடிக்கையில் ஈடுபட்டது இந்திய ராணுவம்.
ராணுவ நடவடிக்கை என்று இந்தியா முடிவு செய்ததும் பாகிஸ்தானின் இதயமான பஞ்சாபில் ஓட்டை போடுவது என்று தீர்மானித்து விட்டார்கள்.
பஞ்சாப் மாநிலத்தின் முதன்மை நகரங்கள் ஆன பவல்பூர் மற்றும் முர்தி கேவை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியது.
54 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் மீது முதல் முறையாக இந்திய ராணுவம் அதிரடி தாக்குதலை நடத்தி இருக்கிறது.
பாகிஸ்தான் பதிலடியாக இந்தியா மீது தாக்குதல் நடத்தினால் அப்பாவி மக்கள் பாதிக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தது இந்தியா.
இந்திய எல்லையில் உள்ள ஜம்மு காஷ்மீர் குஜராத் ராஜஸ்தான் பஞ்சாப் மாநிலங்களின் எல்லைகளில் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்று பத்திரப்படுத்தியது இந்திய ராணுவம்
பாகிஸ்தான் எப்போதும் அதர்ம வழியில் தான் தனது ராணுவ நடவடிக்கையை நடத்தும்.
யுத்த காலங்களில் இந்திய ராணுவம் உடனடியாக வர முடியாத இடங்களில் ஊடுருவி ஆக்கிரமிப்பு செய்வதுதான் பாகிஸ்தான் பாணி இந்த முறை அதையும் தடுத்து நிறுத்தி இருக்கிறது இந்திய ராணுவம்.
Leave a comment
Upload