ஆபரேஷன் சிந்தூர் -1
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுப்பது என்று மத்திய அரசு முடிவு செய்தது..
இந்த விஷயத்தில் உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக நமது நடவடிக்கை இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி முடிவு செய்தார்.
அமெரிக்கா ,ரஷ்யா போன்ற பல முக்கிய நாடுகள் பாகிஸ்தானை எதிர்த்து போர் நடத்துங்கள் நாங்கள் உங்களுக்கு ஆதரவு தருகிறோம் என்று உசுப்பி விட்டாலும் இந்த விஷயத்தில் அவர்கள் ஆலோசனைகள் எல்லாம் மோடி உண்மையிலேயே கண்டுகொள்ளவில்லை..
அவர் தொடர்ந்து ராணுவ அதிகாரிகள் உளவுத்துறை அதிகாரிகள் மத்திய அமைச்சர்கள் என்று எல்லோருடனும் ஆலோசனை செய்து இறுதியாக அவர் முடிவு செய்தது தான் ஆபரேஷன் சிந்தூர்..
பல பெண்களின் நெற்றி குங்குமத்தை அழிக்க காரணமான தீவிரவாதிகளை அதே பெண்கள் மூலம் தாக்குதல் நடத்தி பதிலடி தருவதற்கு தீர்மானம் செய்தார். இப்படி ஒரு அவுட்லைன் தந்தது பிரதமர் மோடி தான் என்கிறது ராணுவ தரப்பு.
பிரதமர் ஒரு விஷயத்தை இராணுவ அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தினார். நாம் அப்பாவி பாகிஸ்தான் மக்களை எதுவும் செய்ய வேண்டாம்.
தீவிரவாதிகளால் இந்தியாவில் பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள். அதை நான் மறக்கவும் இல்லை மன்னிக்கவும் மாட்டேன். நாம் முதலில் தீவிரவாத முகாம்கள் எங்கெங்கு இருக்கிறது என்பதை அடையாளப்படுத்தி அந்த முகாம்களை நாம் நாசமாக்குவோம்.
அந்த தாக்குதல் கடுமையாக, ஏன் கொடூரமாக இருந்தால் கூட பரவாயில்லை என்பதையும் பிரதமர் தெளிவுபடுத்தினார். இதெல்லாம் நடந்தது திங்கட்கிழமை.
இந்த தாக்குதலுக்கு தலைமை ஏற்க விமானப்படையில் இரண்டு பெண் அதிகாரிகளை முடிவு செய்தது ராணுவம். ஒருவர் கர்ணல் சோபியா குரோஷி இன்னொருவர் விமானப்படை வின் கமாண்டர் வியாமிகா சிங்.
சோபியா குரோஷி இஸ்லாமியர். அவர் தாத்தா அப்பா எல்லோருமே இந்திய ராணுவத்திற்காக பாடுபட்டவர்கள். அவரது மதத்தை பிரதமரின் கவனத்திற்கு எடுத்து சென்ற போது இராணுவத்திற்கு ஏது மதம் என்று சொல்லி அதற்கு ஓகே சொல்லிவிட்டார் பிரதமர்.
இந்த ஆபரேஷன் புதன்கிழமை அதிகாலை ஒரு மணி என்று முடிவு செய்யப்பட்டது. .
இந்த தாக்குதலை முப்படைகளும் இணைந்து பொறுப்பேற்று நடத்தும். முதல் கட்ட நடவடிக்கையாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள முசாரா பாத், கோட்லி , பாவல் பூர்,ரவாலா கோட், சக்ஸ் வாரி,பிம்பெர், நீலம் பள்ளத்தாக்கு, ஜீலம் மற்றும் சாக்வெல் என்ற ஒன்பது இடங்களில் லஸ்கர்- இ- தொய்பா, ஜெய்ஸ் இ- முகமது மற்றும் இரு முக்கிய தீவிரவாத அமைப்பு முகாம்கள் அடையாளம் காணப்பட்டன.
இந்த முகாம்களில் பாகிஸ்தான் ரேடார்களுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு ஏவுகணைகள் மூலம் தாக்குதல் என்று முடிவு செய்யப்பட்டது.
இதை ராணுவ அதிகாரிகள் முதலில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங்கிடம் விளக்கினார்கள். அவர் பிரதமரை சந்தித்து விளக்க இன்னும் சில நிமிடங்களில் விமானப்படை தளபதி உங்களிடம் "ஆப்ரேஷன் சிந்தூர்' இறுதி கட்ட திட்டம் பற்றி விரிவாக சொல்வார் என்று சொல்லி இருக்கிறார்.
பிரதமர் மோடி விமானப்படை தளபதி சந்திப்பு நடந்தது அவர் விளக்கி சொன்னதும் பிரதமர் நான் இன்று இரவு தூங்க மாட்டேன் உங்கள் நடவடிக்கை முழுவதும் எனக்கு வினாடிக்கு வினாடி நேரடியாக எனக்கு அப்டேட் பண்ணுங்கள் என்று சொல்லி இருக்கிறார்.
சரியாக சொல்வதென்றால் இந்த தாக்குதல் அதிகாலை ஒரு மணி 5 நிமிடத்திற்கு தொடங்கி 25 நிமிடம் இந்த தாக்குதல் நடந்து 'ஆபரேஷன் சிந்தூர் சக்சஸ்' என்ற இறுதி செய்தியை ராணுவ அதிகாரிகள் பிரதமருக்கு தெரிவித்தார்கள் .அதன் பிறகு தான் நிம்மதியானார் பிரதமர்.
இந்த தாக்குதலை கண்காணிக்க ட்ரோன்கள் அனுப்பப்பட்டன.
தீவிரவாத அமைப்புகளின் தலைமையகங்கள், பயிற்சி முகாம்கள், ஆயுதக் கிடங்குகள் ஆகியவை அழிக்கப்பட்டதை இந்த ட்ரோன்கள் உறுதி செய்தன. குறிப்பாக பாகிஸ்தான் ராணுவ முகாம்களில் எந்த தாக்குதலும் நடத்தப்படவில்லை.
தீவிரவாத முகாம்களை மட்டுமே குறி வைத்து அழிக்கப்பட்டதாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடந்த ஒரு மணி நேரத்துக்கு பிறகு தான் பாகிஸ்தான் மற்றும் மற்ற உலக நாடுகளுக்கே தெரிந்தது.
மத்திய அரசு செய்தி வெளியிட்ட பிறகுதான் சில நாடுகளுக்கே தெரிந்தது.
ஆபரேஷன் சிந்தூர் முதல் அதிர்ச்சி வைத்தியம் பாகிஸ்தானுக்கு.
இதைவிட முக்கியம் தீவிரவாத முக்கிய தலைவர்களுக்கு இந்திய ராணுவம் நீங்கள் யார் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்று எங்களுக்குத் தெரியும் உங்கள் மீதான நடவடிக்கைக்கான நேரம் இப்போது ஆரம்பம் என்று மெசேஜ் அனுப்பி விட்டு தான் தாக்குதலை நடத்தியது .
இந்திய ராணுவம். சொல்லி அடித்தது.
Leave a comment
Upload