தொடர்கள்
விளையாட்டு
ஐபிஎல் 18 : வாரம் 7 – பால்கி

20250409183834362.jpg

ஏழு வாரம் கடந்தும் ப்ளே-ஆஃப் ஸ்டேஜில் விளையாட இருக்கும் நான்கு அணிகள் இன்றும் புதிராகவே உள்ளது. அவ்வளவு கடுமையான போட்டி நிலவுகிறது என்று கடந்த வியாழனன்று எழுக்கொண்டே ஹிமாசல பிரதேசத்தின் தர்மசாலா நகரில் நடைபெற்று வந்த ஐபிஎல்லின் 58ஆவது மேட்ச், பஞ்சாப் Vs டெல்லி ஐபிஎல் மேட்ச்சை பார்த்துக்கொண்டிருந்தேன்.

10.1 ஒவரில் பஞ்சாப் ஒரு விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்த நிலையில் மைதானத்தில்அனைத்து ஒளி வெள்ளம் நின்று போனது. காரணம் போர் பதட்டம்.

வெள்ளி மதியம் வந்த செய்தியின் படி ஐபிஎல் போட்டியை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைப்பது என்று கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

ஐபிஎல்லில் வெளியேறியவர் லிஸ்ட்.

வெளியேறும் கூட்டத்தில் மூன்றாவதாக ஹைதராபாத் அணி புகுந்தது.

முதல் ஆறு அணிகளின் மீதமுள்ள மேட்சுகளில் இந்த கழன்ற அணிகளுடனான சில மேட்சுகள் இன்னும் ஆடப்பட உள்ளன. இதனால் அவர்களது கிரகம் மேலும் கீழுமாக போக வாய்ப்பு உள்ளன.

கொல்கத்தா அணியுடன் சென்னை ஒரு வழியாக ஜெயித்து மூன்றாவது வெற்றியைக் கண்டுள்ளது.

சென்னை அணி 2026 ஐபிஎல் சீசன் மூடில் இருக்கிறார்கள்.

ரிஷப் பந்த் படும் பாடு

20250409185422583.jpg

பஞ்சாப் அணியுடன் லக்னௌ மே 4 அன்று மோதிய மேட்சில் முதலில் ஆடிய பஞ்சாப் ஈவு இரக்கமின்றி 20 ஓவர்களில் 236 அடித்தது, ரிஷப் பந்த்திற்கு வாழ்கையே வெறுத்த நிலை வந்து விட்டது.

ஃபீல்டிங்கில் ஒரு கட்டுப்பாடு வைக்க முடியவில்லை. போதாக்குறைக்கு பௌலர்களின் ஊதாரித்தனம் ….. விக்கெட் கீப்பர் பொசிஷனிலிருந்து அவ்ர் பாட்டுக்கும் பௌலரைப் பார்த்து கத்துவதும், ஃபீல்டர்களைப் பார்த்து கத்துவதும் கூடவே அணியின் முதலாளியின் கடு கடு முகம் இவை எல்லாம் ரிஷப் பந்தின் நிலையை பரிதாபமாக்கியது.அவருடைய அணி தற்போது 7ஆம் இடத்தில். ப்ளே ஆஃப் கஷ்டம் தான்.

ஃப்ளாப் ஷோ

அதிக விலை ஆனால் ஃப்ளாப் ஷோ லிஸ்டில் பிரதம இடம் பஞ்சாபின் க்ளென் மேக்ஸ்வெல், கொல்கத்தாவின் வெங்கடேஷ் அய்யரும் கூடவே இருக்கிறார்கள்.

சென்னையின் ராஹுல் திரிபாதி, ரசின் ரவின்த்ரா

ஹைதராபாதின் இஷான் கிஷான்

லியம் லிவிங்க்ஸ்டோன், டீபக் ஹூடா

ரவி அஷ்வின், துஷார் தேஷ்பான்டே, மொஹம்மத் ஷமி என்று பட்டியல் நீளுகிறது. இவர்கள் மட்டும் ஏன் இந்த லிஸ்டில் என்றால் அவர்களை கோடிகள் கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளனர்.

20250409184901526.jpg

டெல்லி அணியின் அதிரடி ஆட்டக்காரரும், விக்கெட் கீப்பருமான கே எல் ராஹுல் தனது பெண் குழந்தைக்கு எவரா (Evaarah) என்று வைத்துள்ளார். அதாவது முழுவதுமாக கூறினால் எவரா விபுல ராஹுல் என்பதுதான் அது.

20250409184943360.jpg

இந்திய கிரிக்கெட் வாரியத்தை (BCCI) சம்பக் சித்திரக்கதை வெளியிடும் நிறுவனமான டெல்லி ப்ரெஸ் பத்ர பிரகாஷன், அவர்களது புத்தகத்தின் பெயரை உபயோகப்படுத்தியதற்காக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த ஐபிஎல்லில் கிரிக்கெட்டர்களுடன் விளையாடும் ரோபோட் cheerleader நாயின் பெயர் தான் சம்பக். மேலும் இதுதான் இந்த 2025 ஐபிஎல்லின் அதிகாரபூர்வமான சின்னமும் கூட.

20250409185008273.jpg

இந்த வார முடிவில்

குஜராத்தின் ப்ரசித் கிருஷ்ணா 20 விக்கெட்டுகள் எடுத்து பர்ப்பிள் கேப்பும்

மும்பை இண்டியன்ஸின் சூர்யகுமார் யாதவ் 510 ரன்கள்.எடுத்து ஆரஞ்ச் கேப்பும் பெற்றிருக்கிறார்கள்.

ஐபிஎல் போட்டிக்கு ஒரு வாரம் லீவு.