கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரகத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனி வரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.
May 20 - ஸ்ரீ மகா பெரியவா அவதரித்த தினம்
காசி காமகோடீஸ்வரர் கோயில்
இந்த வாரம் காசியில் அமைந்துள்ள காமகோடீஸ்வரர் கோயில் உருவான விதம் பற்றி விவரிக்கிறார். தனது இளமை காலம் முதல் ஸ்ரீ மகா பெரியவாளின் அனுக்கிரஹம் கிடைக்க பெற்று அவரின் ஆசிர்வாதத்தால் தன் வாழ்வில் நடைபெற்ற அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார் திருமதி லலிதா நரசிம்மன் மாமி.
ஸ்ரீ மகா பெரியவாளை பற்றி பேசும்போதே கண்களில் அந்தந்த கண்ணீர் அங்கங்கே பெருக்கெடுத்து ஓடுகிறது. எப்பேர்ப்பட்ட பக்தி. தன் அனுபவத்தின் இறுதி பகுதியில் ஸ்ரீ மகா பெரியவா எப்படி சமைக்க வேண்டும் என்று கூறிய விஷயம் கட்டாயம் நாம் எல்லோரும் கடைபிடிக்க வேண்டிய ஒன்று.
எப்போதும் உணவு சமைக்கும் போது நாள் எண்ணத்துடன், நல்ல விஷயங்களை கேட்டுக்கொண்டே அல்லது உச்சரித்துக்கொண்டே சமைப்பது உத்தமம். அதையே இனி வரும் காலங்களில் கடைபிடிப்போம்.
Leave a comment
Upload