தொடர்கள்
கதை
பேய் எனும் பொய் – சிறுகதை - பா. அய்யாசாமி

20250423101727374.jpeg


இன்னோவா கார் ஒன்று வாசலில் வந்து நிற்பதைப் பார்த்த ராமசாமி எழுந்துவந்து யாரென்றுப் பார்த்தார்,


தட்டுத் தாம்பூலம் எடுத்து வந்தவர்கள் தோற்றத்தில் கொழுத்தப் பணமும்,சதையும் தெரிய, நெற்றி நிறைய பெரிய குங்குமப்பொட்டும் இட்டு வந்தது கணவன் மனைவியாக இருக்கனும் என நினைத்தபடி வரவேற்று உள்ளே அழைத்து உட்காரவைத்தார்,
என்ன விஷயமாக வந்தீங்க ? என இழுத்தார்.
குமாரசாமி நீங்கதானே ? நாங்க கண்டமங்கலத்துக்காரங்க, என்று பெயர் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டார்.

சொல்லுங்கள், நான் அவன் அண்ணன் ராமசாமி

உங்கள் தம்பி பெண் சுதாவின் ஜாதகத்தை தரகர் கொடுத்தார் மிகப் பொருத்தமாக இருந்தது, அதான் அவர்கிட்டே

மேற்கொண்டு பேசலாம் என வந்தோம் என்றனர்.

அண்ணன் தம்பி இரண்டுபேர் வீடும் சேர்ந்தார்போல் ஒரே மதில் சுவருல்தான் உள்ளது, ஆனால் உறவில் குறுக்கே ஒரு மதில் சுவரும் உள்ளது தம்பிக்கு மட்டும்.

அப்படியா, விஷயத்தை புரிந்துக்கொண்ட ராமசாமி,

வெளியே வேலையாகப் போயிருக்கான், அவனிடம் பேசிவிட்டு வருகிறேன் என கொல்லைப்புறம் சென்றார்.

வேறு யாரையோ தொலைப்பேசியில் அழைத்தவர்,பேசிவிட்டு,

மனைவியிடம் வந்து செய்தியைப் பகிர்ந்தார்.
பயந்துப் போன மனைவி "என்னங்க, நமக்கு ஏன் வம்பு ? அவர்களை தம்பி வீட்டிற்கு அனுப்பிவிடுங்கள், உங்கள் தம்பிக்கு தெரிந்தால் அவ்வளவுதான், மேலும் பிரச்சினையாகிடும் ஏற்கனவே நமக்குள் பேச்சுவார்த்தை இல்லை என்றாள்.

காதில் வாங்காத ராமசாமி பெண்ணிற்கு மனநோய் இருப்பதை தரகர் சென்னாரா ? என கேட்டு இல்லாத நோயை இருப்பதாகக் கூறினார்

அதை கேட்டதும் அவர்கள் தரகர் சொன்னார், ஆனாலும் பராவயில்லை என்றுதான் நாங்கள் வந்தோம் என்று அவர்கள் பொய் கூறினர்.

என்னாது பராவயில்லையா ? அமாவாசை அன்னைக்கு தவறாமல் ஏடுகட்டனும், இல்லை என்றால் பக்கத்திலிருக்கும் பெண்கள் மீது பாய்ந்து பிராண்டிடுவாள், அதற்கு வைத்தியம் பண்ணியே என் தம்பி ஏழையாக போகப்போகிறான், இன்று கூட பாருங்க அமாவாசை அதான் ஏடுகட்ட கூட்டிப் போயிருக்காங்க என ராமசாமி சொல்லவும்

அப்ப சரிங்க நாங்க கிளம்புகிறோம் என்றபடி கிளம்பிச் சென்றனர்.

ஏன் இருந்து தம்பியைப் பார்த்துவிட்டுப் போங்களேன் என்றார் ராமசாமி. விட்டால் போதும் என பறந்தனர் வந்தவர்கள்.

என்னங்க இது ? இப்படி பொய்யா அளந்து விட்டீங்க நம்ம பொண்ணுங்க அது என்ற மனைவியிடம்,

வரட்டும் தம்பி, அப்புறம் சொல்கிறேன் என்று பீடிகை போட்டார்.

சொல்லிவைத்த மாதிரி தம்பியும் மாலை தன் மகளுடன் சண்டை போடுவது மாதிரி வீட்டிற்கு வந்தான்,

“அண்ணி, இவளைப் பார்த்தால் பேய் பிடித்த மாதிரியாகவா இருக்கு ?

எப்படி ஜாதகம் பார்த்து சம்பந்தம் எடுத்துவந்த அவர்களிடம் அப்படிச் சொல்லலாம் ? அவர்கள் பெரிய இடம், பண்ணைவீடு வசதியுடையவர்கள் தெரியுமா ? எத்தனை கெட்ட எண்ணம் இருந்தால் இப்படி சொல்லியிருப்பார் என்று சத்தம் போட்டார் குமாரசாமி


ஏம்மா ? உனக்கு ஏதாவது என்னைத் திட்டனும் என்றால் திட்டிவிடு. இருவருக்கும் சேர்த்தே பதில் சொல்கிறேன், என்றவரிடம்,

நீங்கள் அப்படி சொல்லி இருக்கீங்க என்றால் ஏதோ காரணம் இருக்கும் பெரியப்பா, என்றாள் தம்பி மகள் சுதா

நீ் எங்களை புரிந்துக்கொண்ட அளவிற்கு கூட உன் அப்பன் புரிந்துக் கொள்ளவில்லை பாரு என தம்பியைச் சாடினார்.

இந்த வாய் ஜாலமெல்லாம் வேண்டாம், ஏன்அப்படி சொல்லி அவர்களை திரும்ப அனுப்பினிங்க ? அதை மட்டும் சொல்லுங்கள் என அவசரப்பட்டான்.

“ தம்பி கண்டமங்கலத்தில் உள்ள நம்ம உறவினார்களிடம் விசாரித்ததில், ஜாதகம், பில்லிசூன்யம், ஏவல் இதில் எல்லாம் அதிகம் நம்பிக்கை உள்ளவர்கள் என்றும் சமீபத்தில் மகனின் தொழில் நட்டமாகிட, அதற்கு இந்த அமைப்புள்ள ஜாதகத்தைத் திருமணம் செய்தால் அதிலிருந்து மீளலாம் என்று ஜோசியர் ஒருவர் அவர்களுக்கு பரிகாரம் செய்யச் சொன்னதாகவும் எனக்கு தகவல் கிடைத்தது நம் மகள் அவர்களுக்கு என்ன பரிகாரப் பொருளா ? பாரிஜாதப் பூடா அவள். இன்று இதை நம்புவர்கள், நாளை மீண்டும் தொழில் முடங்கிவிட்டால் இவளை பலியும் கொடுக்கத் துணிவார்கள், இந்த மூடநம்பிக்கை ஆசாமிகள் என்றார்.

அதற்காக என் பெண்ணிற்கு பேய் பிடித்து இருப்பதாகச் பொய் சொல்வீர்களா உண்மையைச்சொல்லியே அனுப்பி இருக்கலாமே ? என கேட்ட தம்பியிடம், அவர்கள் எதைச் சொன்னால் நம்புவார்களோ அதைத்தான் சொன்னேன், பொய்மையும் வாய்மையிடத்த தம்பி. அதை நம்பித்தான் ஓட்டமெடுத்தார்கள், இல்லை என்றால் உன்னிடம் திரும்ப திரும்ப வந்து பெண் கேட்பார்கள், ஒரு வேளை அவர்களின் வசதி வாய்ப்பு உன் கண்ணை மறைத்து விடலாம் தம்பீ,

நம்ம வீட்டுப் பெண் நல்லா வாழனும் என்ற அக்கறையில்தான் ஒரு பொய் சொன்னேன் என்ற அண்ணனிடம்,

நீ செய்தது சரிதாண்ணே என்று கூறிவிட்டு கிளம்பினான்.

ஏய் பெரியப்பா! என குரல் கேட்டு திரும்பிய ராமசாமி

உனக்கு வைக்கிறேன் இரு பெரிய ஆப்பா, என்று முடிகளை முன்னே போட்டு் கரகர குரலில் இன்னும் அமாவாசை முடியலை என உருமினாள் சுதா,
எடு அந்த பிஞ்ச செருப்பை என்று பெரியப்பா சொன்னதும் சிரித்தபடி ஓடியே போயிருந்தாள் சுதா தன்வீட்டிற்கு.