சமீபத்தில் நண்பன் மகேஷை பார்த்த போது கொஞ்சம் வித்தியாசம் தெரிந்தது.
கண்களில் சோர்வு இல்லை. ஒரு மாதிரியான ஹாங்ஓவர் இல்லாதது போலத்தான் இருந்தது.
எப்படிடா இருக்க ??
நல்லா இருக்கேம்பா. இந்த குடி சனியன தொடக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்.
சூப்பர் டா. அதான் ஃப்ரெஷ்ஷா இருக்க. என்ன திடீர்னு ??
திடீர்னு எடுத்த முடிவு தான். அதான் இனிமே குடிக்க வேண்டாம்னுட்டு திருப்பதி போய் பாலாஜி முன்னாடி சத்தியம் பண்ணிட்டு வந்துட்டேன். என்றான். மகிழ்ச்சியாக இருந்தது.
இன்னும் பல நண்பர்கள் வந்தார்கள். எல்லோரிடமும் பழைய கதையெல்லாம் பேசிவிட்டு புறப்படுகையில் மகேஷிடம் சொன்னேன்.
பாத்துரா பாலாஜிக்கிட்ட சொன்ன மாதிரியே நடந்துக்க.
நிச்சயம்ரா.நிச்சயம். அதான் ஒரு சில விதிவிலக்கு குடுத்துருக்காருல்ல... என்று இழுத்தான்.
விதிவிலக்கா ? அதென்ன ???
யூ சீ ஐ டோல்ட் பாலாஜி. சத்தியமா இனிமே குடிக்க மாட்டேன். ஆனா சில நாட்கள் என்க்கு எக்ஸம்ஷன் வேணும்னு....
அதென்ன மாதிரி விதி விலக்கு.??
"அதாவது டா.. வீக் எண்ட்ஸ், எதாவது பர்த் டே பார்ட்டி, புது வருடம், யார் வீட்டுக்காவது இன்வைட் பண்ணிட்டு போனா... ". அடுக்கிக் கொண்டே போனான்.
போடாங்கொய்யால... உங்கிட்ட பாலாஜி வந்து சத்தியம் கேட்டாரா ?? அங்க கடிச்சு இங்க கடிச்சு அவரையே கலாய்ச்சுட்டு வந்துட்ட.... " கோவம் வந்தது.
மச்சான் சொன்னா நம்புடா குடிக்கறத விட்டுட்டேன். !!
மகேஷை அந்த மகேஸ்வரனே வந்தாலும் காப்பாத்த முடியாது.
Leave a comment
Upload