தொடர்கள்
கவர் ஸ்டோரி
சைடு சைடு சைடு...வருது பார்...ரெய்டு ரெய்டு ரெய்டு.... - விகடகவியார்

20250423102908517.jpeg

தனியார் சேனல்களின் "நியூஸானதா" என்று செல்லமாக அழைக்கப்படும் அமலாக்கத்துறை வழக்கப்படி டாஸ்மாக் அதிகாரிகள் வீடுகளில் சோதனை விசாரிப்பு என்று இரண்டு நாள் வைபவத்தை இனிதே முடித்தது.

இந்த முறை அமலாக்கத்துறை அதிகாரிகளை குறி வைத்தது.

அமலாக்கத்துறைக்கு தேவையான விவரம் இதுதான் செந்தில் பாலாஜி சிறையில் இருந்தபோது அந்த 14 மாதம் கொடுக்கல் வாங்கல் விவரங்கள் என்ன என்பதுதான் அவர்களுக்கு தேவைப்பட்ட விவரம். இதில் முக்கிய தமாஷ் அப்போது கலால் துறை அமைச்சராக இருந்த முத்துசாமி அமலாக்கத்துறை லிஸ்டிலேயே இல்லை. காரணம் கொடுக்கல் வாங்கல் விஷயம் அவருக்கு சம்பந்தமில்லாதது என்று அமலாக்கு துறையே முடிவு செய்துவிட்டது.

இந்த முறை டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் விசாகன் மற்றும் அவரது மனைவியை அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்துச் சென்றது.

வழக்கப்படி தனியார் சேனல்கள் அமலாக்கத் துறையிடம் முக்கிய ஆவணங்கள் சிக்கின லேப்டாப் கைப்பற்றினார்கள், பென் டிரைவ் கைப்பற்றினார்கள் என்று ரீல் விட்டுக் கொண்டிருந்தார்கள்.

விசாகன் கைது செய்யப்படலாம் என்று கூட பேச்சு வந்தது.

அமலாக்கத்துறை சோதனை இனிதே முடிந்தது என்று ஒற்றை வரி செய்தியோடு விசாகனை வீட்டுக்கு அனுப்பி விட்டது.

அமலாக்கத்துறை சோதனை நடத்திய வேறு சில திடீர் பிரபலங்களாக மாறியவர்களில் ஒருவர் ரதீஷ் இவர் ஐபிஎஸ் அதிகாரி சர்வேஷ் சகோதரர்.

எப்படியோ இவர் துணை முதல்வர் உதயநிதிக்கு நெருக்கமாகிவிட்டார்.

அமலாக்கத்துறை நீண்ட நாட்களாக இவரை கவனித்து கண்காணித்து வந்திருக்கிறது. அவர் வீட்டிற்கு சோதனை என்ற தகவல் ரதீஷுக்கு எப்படியோ தெரிந்து விட்டது. அவர் வீட்டை பூட்டி கொண்டு எஸ்கேப்.

அவருடைய சகோதரர் செல்வாக்கால் அவர் துபாய் வழியாக பாதுகாப்பாக லண்டன் சென்று விட்டார் என்று ஒரு தகவல்.

இப்போது அமலாக்கத்துறை அவரது வீட்டை பூட்டி சீல் வைத்திருக்கிறது.

தமிழகத்தில் சோதனை செய்த மேலும் இரண்டு முக்கிய பிரமுகர்கள் தொடர்புடைய நிறுவனங்கள் தற்சமயம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

ஒருவர் திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இன்னொருவர் வாலாடி கார்த்திக்.

இப்போதைக்கு ஆகாஷ் பாஸ்கர் தான் பேசும் பொருள்.

இவர் அமைச்சர் அன்பில் மகேஷின் நெருங்கிய உறவினர். ஆகாஷ் பாஸ்கர் கவின் கேர் உரிமையாளர் சி.கே.ரங்கநாதன் வளர்ப்புப் பெண் தாரணியை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். கவின் கேர் ரங்கநாதன் மனைவி தேன்மொழி கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்துவின் மகள்.

இப்போது இதுவல்ல பிரச்சனை. கவின் கேர் ரங்கநாதன் தொழிலதிபர் என்றாலும் இந்த விஷயத்தில் அவர் சீனில் இல்லை என்பதால் அமலாக்கத்துறை அவரை கண்டுகொள்ளவில்லை.

ஆகாஷ் பாஸ்கரனை துருவித் துருவி விசாரித்ததற்கு காரணம் இருக்கிறது.

சேலத்தில் உள்ள பிரபல நகைக்கடை உரிமையாளரின் மகன் ஆகாஷ் சில படங்களுக்கு துணை இயக்குனராக பணி புரிந்திருக்கிறார்.

திடீரென படத் தயாரிப்பாளர் ஆகிவிட்டார்.

தனுஷின் இட்லி கடை சிவகார்த்திகேயனின் பராசக்தி இது தவிர சிம்புவின் ஒரு படத்தை தயாரிக்க முடிவு செய்து இருக்கிறார். இதுவரை படத் தயாரிப்புக்கு 450 கோடி செலவு செய்திருக்கிறார் ஆகாஷ் பாஸ்கரன். இது போதாது என்று இதயம் முரளி என்ற படத்தை ஆகாஷ் பாஸ்கரின் தயாரித்து இயக்கி வருகிறார்.

அமலாக்கத்துறையை பொறுத்தவரை முதல்வரின் குடும்பம் முறைகேடான டாஸ்மாக் வருமானத்தை சிலர் மூலம் தமிழ் சினிமாவில் பயன்படுத்துகிறதோ என்ற சந்தேகம் வரத் தொடங்கிய பிறகு தான் விசாகனிடம் விசாரணை ஆகாஷ் பாஸ்கர் ரதீஷ் என்று தேட ஆரம்பித்தது.

இதில் ரதீஷ் சகோதரர் இந்தியாவின் முக்கிய உணவு அமைப்பான “ ரா’’ வில் பணி புரிந்து இருக்கிறார்.

இப்போது முதல்வர் குடும்பத்திற்காக அப்போது முதல்வர் குடும்பத்திற்காக சில வில்லங்க வேலைகளை செய்ய ரா தலைமை கண்டுபிடிக்க மீண்டும் தாய் அலுவலகமான தமிழக காவல்துறைக்கு திரும்பி விட்டார்.

இங்கு கூட தனது செல்வாக்கை பயன்படுத்தி முக்கிய பதவியில் அமராமல் ஓரமாக உட்கார்ந்து கொண்டு வேலை பார்க்கிறார் என்ற தகவலும் தற்சமயம் பேசும் பொருளாக இருக்கிறது. இவர் மூலம்தான் ரதீஷ் துணை முதல்வருக்கு நெருக்கமானாராம். ரதீஷ் தப்பிக்க அவர் சகோதரர்தான் உதவி செய்தார் என்ற பேச்சும் தற்சமயம் வரத் தொடங்கி இருக்கிறது.

இதுபோன்ற சோதனையின் போது அமைச்சர் ராஜினாமா, துணை முதல்வர் ராஜினாமா கேட்கும் தமிழக பாஜக தலைவர்களும் கப் சிப்.

ஆப்ரேஷன் சிந்தூர் பற்றி உலக நாடுகளில் போய் விளக்கி சொல்லும் குழு தலைவராக கனிமொழி நியமனம். அமலாக்கத்துறை விசாரணையின் போது அமித்ஷாவுக்கு வேண்டிய ஒரு கட்டுமான நிறுவன தலைவர் மூலம் அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு சுபம் போட சொல்லிவிட்டதாம். இது போதாது என்று கனிமொழியும் முக்கிய தலைவரிடம் பேசியிருக்கிறாராம். அதனால்தான் விசாகன் கைது செய்யப்படவில்லை என்கிறார்கள்.

அமலாக்கத்துறை நடவடிக்கை எப்போதுமே நமத்துப்போன ஊசி பட்டாசு மாதிரி தான் படபட என்று பட்டாசில் பொறி எல்லாம் வரும் ஆனால் புஸ் என்று போய்விடும். ஏற்கனவே செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார் தலைமறைவானார் அவரை கண்டுபிடிக்க அமலாக்கத்துறை எந்த முயற்சியும் செய்யவில்லை அவர் எதிர்த்து லாக்அவுட் நோட்டீஸ் எல்லாம் தந்தது அதன் பிறகு அவரே போரடித்து ஒரு நாள் அமலாக்கத்துறை முன்பு ஆஜர் ஆனார்.

அதன் பிறகு அவரையும் அனுப்பிவிட்டது கைது எல்லாம் செய்யவில்லை.கொஞ்சம் மாசம் கழிச்சு ரத்ஷுக்கும் இதே கதை தான் நடக்கும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

தமிழக அரசு உச்ச நீதிமன்றம் செல்ல அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்து விட்டது.

அமலாக்கத்துறை ஆக மொத்தம் ஒரு சிரிப்பு போலீஸ் என்பதில் மக்களுக்கும் சந்தேகமில்லை.

பி.கு: ஒரு சிறுவாட்டு காசைக் கூட யாருக்கும் தெரியாமல் அங்கே இங்கே நகர்த்த முடியவில்லை. எப்படி ஆயிரம் கோடி அசால்ட்டா புழங்குகிறார்களோ தெரியலையே ????