தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா-லைட் பாய்

அமலாக்கத்துறை விசாரணை

20250422211328839.jpeg

தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் அமலாக்கத்துறை விசாரணைக்கு உட்பட்டதால் தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் ஆகியோரையும் அமலாக்கத்துறை விசாரணை செய்யுமாம். இவரிடம் தனுஷ் 40 கோடி, சிவகார்த்திகேயன் 25 கோடி, சிம்பு 15 கோடி என படத்தில் நடிக்க அட்வான்ஸ் வாங்கி இருக்கிறார்களாம். எனவே அது பற்றி அமலாக்கத்துறை விரைவில் விசாரிக்கும் என்கிறார்கள்.

ருக்மணி வசந்த்

20250422211514808.jpeg

மணிரத்தினம் நடிகர் நவீன் பொலிஷெட்டி ருக்மணி வசந்த் ஜோடியில் தெலுங்கில் விரைவில் ஒரு படம் பண்ணப் போகிறார்.

திரிஷா

20250423073334735.jpeg

தக்லைஃப் படத்தில் கமலுக்கு ஜோடி திரிஷா போலும். இது விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் திரிஷா காதல் காட்சிகளில் வயது இடைவெளி தெரியாது மேஜிக்காக இருக்கும் என்று பதில் சொல்லி இருக்கிறார்.

ராஷ்மிகா

20250423073643473.jpeg

ராஷ்மிகா ராகுல் ரவீந்திரன் நடித்த கேர்ள் பிரண்ட் படம் இரண்டு வருடமாக இப்போ அப்போ என்று திரைக்கு வராமல் இழுத்து அடிக்கப்படுகிறது. ராஷ்மிகா ரசிகர்கள் ரிலீஸ் கேர்ள் பிரண்ட் என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டிங் ஆக்கிவிட்டார்கள் இயக்குனர் கடுமையாக உழைத்து கொண்டிருக்கிறார் வெயிட் ப்ளீஸ் என்று ரசிகர்கள் சமாதானப்படுத்தி வருகிறார் ராஷ்மிகா.

தன்ஷிகா

20250423073918410.jpeg

ஒரு வழியாக விஷால் தன்ஷிகாவை கல்யாணம் செய்து கொள்ள போவதை பொது மேடையில் முத்தம் தந்து அறிவித்து விட்டார்கள். இன்னும் கொஞ்ச நாள் ரகசியமாக வைத்துக் கொள்ளலாம் என்று இருந்தோம் அதற்குள் யாரோ ஒருவர் தகவலை கசிய விட்டு விட்டார் அவரை தேடிக் கொண்டிருக்கிறேன் என்கிறார் தன்ஷிகா.

.ஆர்.ரகுமான்

ஒரு பேட்டி ஒன்றில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை தொகுப்பாளனி 'பெரிய பாய்' என்று சொல்ல நான் என்ன கசாப் கடையா வைத்துக் கொண்டிருக்கிறேன் எனக்கு இந்த பெயர் பிடிக்கவில்லை என்று பளிச்சென்று சொல்லிவிட்டார்.

ஹன்சிகா

இப்போது பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் ஹன்சிகா insta வில் விதவிதமான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறார். தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் இந்த படங்களை பார்த்தார்களா தெரியவில்லை.

லிப்-லாக்

20250423074639163.jpeg

தக்லைஃப் ட்ரெய்லர் வெளியாகி இணையத்தை கலக்கி கொண்டிருக்கிறது. கமலஹாசனின் லிப்லாக் சீன் .

சுட சுட

ரவீனா ரவி

டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக அறிமுகமான ரவீனா ரவி, ஒரு கிடாயின் கருணை மனு, வட்டார வழக்கு, மாமன்னன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இப்போது ஆசாதி என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ரவீனாவிற்கு வாய் பேச முடியாத ஒரு சிறைக் கைதி வேஷமாம்.

சஞ்சனா

லப்பர் பந்து படம் மூலம் பிரபலமான சஞ்சனா தனது லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்திருக்கிறார். தக்லைஃப் படத்தில் மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார். விரைவில் நடிகர் கவின் நாயகனாக நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார் சஞ்சனா.

விஜய் தேவரகொண்டா

நடிகை ராஷ்மிகாவுடன் இணைந்து நிறைய படங்களில் நடிக்க விரும்புகிறார் விஜய் தேவரகொண்டா. ஏற்கனவே கீதா கோவிந்தம் டியர் காம்ரேட் படத்தில் இந்த ஜோடி நடித்திருக்கிறது.

சூரி

சந்தானத்துக்கு பிறகு கதாநாயகனாக பதவி உயர்வு பெற்ற சூரியின் படங்கள் வியாபார ரீதியாக நல்ல வசூலாம். சந்தானம் அந்த அளவு இல்லையாம்.