கல்வி நிதிக்கு தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு.
அரசாங்கத்துக்கு வர நிதி எல்லாம் வக்கீல் பிஸூக்கே போயிடும் போல தெரியுது !!
எனக்கும் அன்புமணிக்கும் இடையே எந்த மனக்கசப்பும் இல்லை டாக்டர் ராமதாஸ்.
இதை அன்புமணி ஒரு வாட்டி சொல்ல சொல்லுங்க பாக்கலாம் !!
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்களில் நீதிமன்றங்கள் தலையிடுவதில்லை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து.
ஆமா தடை மட்டும்தான் தருவாங்க !!
அங்கீகாரம் அற்ற மருத்துவக் கல்லூரியில் சேர வேண்டாம் தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தல்.
ஆமா இவங்க சேர வேண்டாம் மட்டும் தான் சொல்லுவாங்க அந்தக் கல்லூரி எல்லாம் இழுத்து பூட்ட மாட்டாங்க !!
சென்னையில் வெள்ள தடுப்பு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு.
அவ்வளவு வெள்ளமா வந்தது !!
தமிழிசைக்கு மீடியா மேனியா அமைச்சர் சேகர்பாபு காட்டம்.
உங்களுக்கு இல்லையாக்கும் !!
மக்கள் பணம் மக்களுக்கே கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம் ராகுல் காந்தி.
இப்ப மக்களுக்கு கிடைக்காம யாருக்கு கிடைக்குது !!
நிதி ஆயோக் கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்கிறார்.
புறக்கணிச்சி புறக்கணிச்சி போர் அடிச்சிருக்கும் அதான் !!
பூஜை நேரங்களில் கோயில் கதவுகள் திறந்தே இருக்க வேண்டும் இந்து அறநிலைத்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.
கோயில் கதவு திறப்பு கோர்ட் வரை வந்துடுச்சு !!
இந்தியா தர்மசத்திரம் கிடையாது உச்ச நீதிமன்றம் கருத்து.
அப்போ ஷேக் அசினாவை திருப்பி அனுப்பி விடுவார்களோ !!
Leave a comment
Upload