தொடர்கள்
சோகம்
" அணு விஞ்ஞானி - ஸ்வேதா அப்புதாஸ் .

20250422162137578.jpg

அணு விஞ்ஞானி எம் ஆர் .ஸ்ரீனிவாசன் தன் 95 வது வயதில் மே 20 ம் தேதி மறைந்தார். இவரின் முழு பெயர் மல்லூர் ராமசாமி ஸ்ரீனிவாசன் 1930 ஆம் வருடம் ஜனவரி மாதம் பெங்களூரில் பிறந்து வளர்ந்த இவர் சம்ஸ்கிருதம் மற்றும் ஆங்கிலத்தில் புலமைபெற்றவர் .

இயற்பியல் மீது காதல் ஏற்படுத்தி படித்துள்ளார் .1950 யில் விஸ்வேஸ்வரையா ஆரம்பித்த புதிய பொறியியல் கல்லூரியில் சேர்ந்து மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பில் பட்டப்படிப்பு பெற்று 1952 யில் முதுகலை பட்டம் ,1954 ஆம் வருடம் தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்று .கனடா நாட்டில் உள்ள மாண்ட்ரியில் நகரில் எம் சி கில் பல்கலைக்கழகத்தில் கேஸ் டர்பின் டெக்னோலஜி பயின்று பட்டம்பெற்றார் .

கேஸ் டர்பின் என்பது எரி வளி சுழலியில் இயங்கும் அதே நேரத்தில் அதிலிருந்து வரும் தேவையற்ற வெப்ப ஆற்றலின் மூலம் நீராவியை உருவாக்கி அந்த நீராவியின் மூலம் நீராவி சுழலி இயங்க வைக்கப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது .

20250422162158830.jpg

இதனால் அதிக அளவு ஆற்றல் வீணாகுவது தடுக்கப்படுகிறது என்பதை தன் ஆராய்ச்சி மூலம் கண்டறிந்தவர் .

1955 ஆம் வருடம் தன் 25 ம் அகவையில் டாக்டர் ஸ்ரீனிவாசன் இந்திய அணுசக்தி துறையில் சேர்ந்து டாக்டர் .ஹோமி பாபுவுடன் இணைந்து ஆராய்ச்சியில் இந்தியாவின் முதல் அணு உலை ஆராய்ச்சி அப்சரா கட்டமைப்பில் வெற்றிபெற்றார் .

1984 யில் அணுமின் கழகத்தின் தலைவர் பொறுப்பை வகித்தார் .

இந்தியாவின் அணுமின் சக்தி கழகத்தின் நிறுவன தலைவராக பொறுப்பேற்று 18 அணுமின் நிலையங்கள் துவங்கின பெருமை இவரை சேரும் .

ஏழு அணுமின் நிலையங்கள் கட்டுமான பணியிலும் புதிய திட்டங்கள் இவரின் ஆலோசனைகள் கீழ் இருந்து வந்துள்ளது .

சென்னை கூடங்குளம் அணுமின் நிலையம் உருவானது ஸ்ரீனிவாசனின் ஆலோசனை பேரில் தான் .சர்வேதேச அணுசக்தி முகமையின் மூத்த ஆலோசகர் . டாக்டர் எம் .ஆர் . ஸ்ரீனிவாசனின் சேவையை அங்கீகரித்து நாட்டின் உயரிய விருதான பத்மவிபூஷன் 2015 ம் ஆண்டு வழங்கப்பட்டது .

1984 ம் வருடம் இவரின் அறிவியல் சேவையை பாராட்டி பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது .

தமிழக அரசின் இறுதி மரியாதையாக காவல்துறையின் 30 குண்டு முழங்க டாக்டர் . ஸ்ரீனிவாசனின் உடல் தீ ஜுவாலையுடன் மறைந்தது .