உயர்நீதிமன்றத்தில் இருந்த போது நமது முன்னாள் அமலாக்கத்துறை அதிகாரி கேஷீவலாக நம்மிடம் சொன்னது….
சென்ற 10 வருடங்களில் அரசியல் வாதிகள் 193 பேர் மீது அமலாக்கத்துறை வழக்கு போட்டு 2 பேர் மட்டும் வழக்கில் தண்டனை பெற்றுள்ளனர்.
அரசியல் விவிஜபிக்கள் மீது அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியதும் இந்திய டிவி சேனல்களில் “பிரேக்கிங் நியூஸ்” ஓடும்.
சில நாட்கள் கழித்து ரெய்டு நடந்த இடத்தில் எந்தவித சத்தமின்றி அமலாக்கத்துறையினர் திரும்பி சென்று விடுவார்கள்.
பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்டில் 33 கோடிக்கு புதிய ரூ2000 கரன்சி நோட்டுக்கள் இருந்தது என அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தினார்கள். அதன்பின் சத்தமில்லாமல் கைப்பற்றப்பட்ட பணம் என்ன ஆனாது என்று தெரியாமல் அவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தன் மீதான அமலாக்கத்த்துறை வழக்கினை ரத்து செய்து கொண்டார்.
பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜுனா அமலாக்கத்துறை ரெய்டு செய்தது, அதன்பின் அவர் விசிக கட்சியிலிருந்து இப்போது விஜய் கட்சிக்கு தாவியிருக்கிறார்.ரெய்டு ரிசல்ட் என்ன ஆனாது என்பது பில்லியன் டாலர் கேள்வி .
அமைச்சர் துரைமுருகன் மகன் எம்பி கதிர்வேல் ஆனந்த் மீதும் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது , அதன்பின் என்ன ஆனாது என்று தெரியவில்லை .
இப்போது டாஸ்மாக் ரெய்டு , ரெய்டு , ரெய்டு என அமலாக்கத்துறை நடத்தினாலும் இறுதியில் வெல்லப்போவது அரசியல் பலம் மட்டுமே என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே அமலாக்கத்துறை ரெய்டுக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்து விட்டது.
குற்றத்தில் ஈடுபடும் அரசியல் வாதிகள் அவர்களின் பினாமிகளின் சொத்துக்களை உடனடியாக பறிமுதல் செய்து அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும் என்பதே பொதுமக்களின் குரலாக உள்ளது.
இந்தியாவில் இதுவரை அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தி வருகிறார்கள் என்றால் பழைய சினிமாக்களில் சண்டை முடிந்த பின் வரும் பழைய ஈயம், பித்தளை ,பேரிச்சம் பழத்துக்கு போடும் டயர் பஞ்சர் ஆகும் நிலையில் உள்ள ஜீப்பில் போலீஸ் அதிகாரிகள் வருவது போன்று பொதுமக்கள் கலாய்க்க தொடங்கி விட்டார்கள்.
அமலாக்கத்துறை ரெய்டு என்பது பிம்பிலாக்க பிலாபி என்று ஊழல் அரசியல் தலைவர்கள் கொக்கரிப்பது உங்கள் காதில் விழுகிறது தானே!
Leave a comment
Upload