எடப்பாடி vs ஸ்டாலின்
இப்போது எடப்பாடி ஸ்டாலின் அறிக்கை எல்லாமே கலாய் மாதிரி தான் இருக்கிறது லேட்டஸ்ட் கலாய் இது.
இதுவரை நிதி ஆயோக் கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் புறக்கணித்து வந்தார். இப்போது திடீரென கலந்து கொள்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். இது பற்றி எடப்பாடி கலாய் அறிக்கை இதோ :
"மத்திய அரசு தமிழ்நாட்டை புறக்கணிப்பதால் நிதி ஆயோக் கூட்டத்தை நான் புறக்கணிக்கிறேன் "என்று வீரவேசமாக பேசிய ஸ்டாலின் தற்போது நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி பறக்கிறாராம்.
தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு தேவை என்றால் போகாதவர், தன் குடும்பத்திற்கு ஒரு தேவை என்றதும் செல்கிறார்.
அன்று 2ஜிக்காக அப்பா டெல்லி சென்றார். இன்று .... டாஸ்மாக் ... . தியாகி ....தம்பி வெள்ளைக் கொடிக்கு வேலை வந்து விட்டதோ ? எல்லாம் "தம்பி "படுத்தும் பாடு !! யார் அந்த தம்பி" என்று கேள்வி எழுப்பி இருந்தார் எடப்பாடி.
எடப்பாடியின் இந்த கலாய்க்கு பதிலாக ஸ்டாலின் சொன்ன கலாய் இதோ :
"தமிழ்நாட்டிற்கான நியாயமான நிதி உரிமை நிதி ஆயேக் கூட்டத்தில் வெளிப்படுத்த 24 ஆம் தேதி டெல்லி செல்கிறேன் !!
சசிகலா முதல் அமித்ஷா ஆள் மாறினாலும் டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் மாறாத எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமிக்கு இதனைக் கண்டு ஏன் வலிக்கிறது ?
"பாஜகவுடன் கூட்டணி கிடையாது" என்று அடித்துச் சொன்ன நாக்கின் ஈரம் காய்வதற்குள் ஒரே ரெய்டில் 'புலிகேசி'யாக மாறி வெள்ளைக்கொடி ஏந்திச் சென்ற பழனிச்சாமி என்னை பார்த்து வெள்ளைக்கொடி ஏந்தியதாக பேச நா கூசவில்லையா ? இந்த ஸ்டாலின் கை கருப்பு சிவப்பு கொடியை ஏந்தும் கை !! பேரறிஞரால் தூக்கி விடப்பட்ட கை !! கலைஞரின் கரம் பற்றி நடந்த கை !! என்னாளும் உரிமைக்கொடியை தான் ஏந்துவேன் !! ஊர்ந்துபோக மாட்டேன் !! இன்றைக்கு கூட தமிழ்நாட்டில் உரிமைக்காக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளேன். கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பேன். தமிழ்நாட்டிற்கான நிதியை போராடி பெறுவேன் "என்று பதில் சொல்லி இருந்தார்.
இதற்கு எடப்பாடியின் கலாய் பதிலடி இதோ :
"முந்தைய மூன்று ஆண்டுகள் நிதி ஆயோக் கூட்டங்களை தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது என்று வீர வசனம் பேசி, தமிழ்நாட்டின் முதல்வராக, தமிழ்நாட்டின் நியாயமான நிதி உரிமை பெறச் செல்லாத நீங்கள், இப்போது மட்டும் சொல்ல வேண்டிய காரணம் என்ன ? தமிழ்நாடா ? இல்லவே இல்லை உங்கள் குடும்பம் தானே ? ரெய்டை பார்த்து யாருக்கு பயம் ? அது கண்ணாடி !! உங்களைப் பார்த்து நீங்களே ஏன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் ? அறிவாலயம் மேல் மாடியில் சிபிஐ ரெய்டு வந்த போது நீங்களும் உங்கள் தந்தையும் 63 தொகுதிகளை தாரை வார்த்து தந்த போது டேபிளுக்கு கீழ் தவழ்ந்து சென்றீர்களா ? ஊர்ந்து சென்றீர்களா ? எதிர்க்கட்சியாக கருப்பு பலூன் காட்டிவிட்டு ஆளுங்கட்சியாக வெள்ளை குடை காட்டினீர்களே அப்போது தவழ்ந்து சென்றீர்களா ? ஊர்ந்து சென்றீர்களா ? எது ஸ்டாலின் கை ? அண்ணா பல்கலைகழகக் வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர் உள்ளிட்ட சுய விவரங்களோடு எஃப் ஐ ஆர் லீக் செய்த கை ஸ்டாலின் கை. ஜாபர் சாதிக் போன்ற சர்வதேச போதை பொருள் மாஃபியா தலைவனை அயலக அணி அமைப்பாளராக நியமித்த கை உங்கள் கை, ஞானசேகரன் முதல் தெய்வச் செயல் வரை சகல பாலியல் குற்றவாளிகளையும் அவர்கள் பின்னணியில் இருக்கும் "சார்" களையும் பாதுகாக்கும் கை, உங்கள் கை. உங்கள் எல்லா மடைமாற்றுப் பேச்சுகளுக்கும் பதில் அளிக்க நான் தயார். ஆனால் மக்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் !! யார் அந்த தம்பி ? எந்த கலாய்த்து இருக்கிறார் எடப்பாடி.
Leave a comment
Upload