மும்பை சுற்றுலா சென்றுருந்த மோகன் ஊர் சுற்றி பார்த்து விட்டு அன்று மாலை, அந்தப் பிரபல ஹோட்டலில், செக் இன் பண்ணும் போது ரிஷப்ஷனில் அட்வான்ஸ் கட்டுவதற்குத் தன்னுடைய கிரெடிட் கார்டு கொடுத்து .
அட்வான்ஸ் தொகைக்குப் பில் வாங்கி விட்டுத் திரும்பக் கிரெடிட் கார்டை.அந்த ஊழியர் .மூலம் வாங்கிக் கொண்டான். .
மறுநாள் காலை 9 மணிக்குச் சென்னை ஃப்ளைட் . கிளம்ப வேண்டும் .
மிகவும் சோர்வாக இருந்ததால் மோகனும் மனைவியும் சீக்கிரமாகவே தூங்கி விட்டனர்.
அதிகாலை 5.30. அந்த நேரத்தில் வந்த லாண்ட் லயன் அடிக்கவே தூக்க கலக்கத்தில் அந்த அழைப்பை, எடுத்து மோகன் பேசும் போது,
“சார், good morning நான் ரிசெப்ஷனிலிருந்து பேசுறேன்... நீங்க 7மணிக்கு செக் அவுட் பண்றீங்க இல்லையா? .”
“ஆமாம் “
உங்கள் கிரெடிட் கார்டு பில்லிங் செய்யும்போது Error வருது.
தயவு செய்து மீண்டும் கார்டு விபரங்கள் கொடுங்க. நாம பில்லை உடனே செட்டில் பண்ணிடலாம்…”
“என் டூட்டி முடியுது . வருபவர் கிட்ட அக்கௌன்ட் கொடுக்கணும் "
மோகன் . தூக்க கலக்கத்தில் இருந்தபடியே கார்டு எண், காலாவதி தேதி, பின்னே உள்ள CVV—எல்லாவற்றையும் சொல்ல,
“சார்!OTP வரும் சொல்லுங்க
உடனே பில் செட்டில் ஆயிடும்…”
காலை 7 மணி அளவில் செக் அவுட் பண்ணும் போது மொபைலை பார்த்த போது ஒரு SMS வந்துருந்தது
"INR 74,860 debited via online transaction –"
ஷாக் ஆகி போன மோகன்
அவசரமாக ரிசப்ஷன் போய்க் கேட்டதற்கு நாங்கள் இப்ப தான் பில் தயார் செய்கிறோம் என்று சொல்லி உள்ளார்கள்.
மோகன் இழந்தது, அந்த ரூ.75,000 மட்டும் அல்ல... நம்பிக்கையும், பாதுகாப்பு உணர்வும்.
யார் செய்து இருப்பார்கள்?
இந்த மோசடி எப்படி நடந்தது?
உடனே தன் நண்பன் cyber crime Chennai சேகரிடம் நடந்த விபரத்தை பதட்டத்துடன் சொன்னான் மோகன்.
“இந்த வகை மோசடி முறையை "Hotel Room Call Scam" என்று சொல்லுவாங்க மோகன்… மும்பை மட்டுமல்ல . முக்கியமான சுற்றுலா தலம்,உள்ள நகரங்கள் போன்ற இடத்தில் நடக்கிறது. அதுவும் வட இந்தியாவில் சர்வ சாதாரணம். பணத்தை இழந்தவர்கள் நிறைய.பேர்கள்.
வெளியிலிருந்து ஹோட்டலின் பொதுத் தொலைபேசி எண்ணை அழைத்து, ஒரு குறிப்பிட்ட ரூம் நம்பர் சொல்லி
“ transfer பண்ணுங்க” என்பார்கள்
சில ஹோட்டல்கள், வாடிக்கையாளரின் அனுமதி இல்லாமலும், இந்த ‘internal room transfer’ வசதியை வழங்குகின்றன.
அதனால்தான், அந்த மோசடி நபர் நேரடியாக உன்னுடைய ரூம் landline-க்கு அழைத்து .உன்னிடம் பேசி உள்ளான்.
அந்தக் குரல் நம்பிக்கைக்குரியதாகவும் மிகவும் சாதாரணமாகவும் இருக்கும்படி பேசியதால் உனக்கு நம்பிக்கை ஏற்பட்டு விட்டது..
— பயணச்சோர்வில் இருந்த நீ எதையும் யோசிக்காமல் உடனே வலையில் விழுந்துட்டே”
இது மாதிரி scam கால்களில் முக்கியக் கட்டமாக OTP கேட்பது வரும்.
OTP என்பது, உங்கள் அனுமதி என்ற கடைசிப் பாதுகாப்பு
. அதை யாரிடமும் சொல்லவே கூடாது. ஆனாலும், “ரிசெப்ஷனிலிருந்து தான் பேசுறோம்” என்ற வார்த்தை — நம்பிக்கை, கேள்வி கேட்காமல் உன்னைத் தகவல் கொடுக்க வைத்துள்ளது..
யாரும், எதற்கும், கிரெடிட் கார்டு விவரங்களை—including CVV, OTP—போன் வழியாகக் கேட்க மாட்டார்கள்.
உண்மையான ஹோட்டல் ஊழியர்களே இருந்தாலும், அவர்கள் "பதில் சொல்லும் போன்" வழியாக sensitive data கேட்பதில்லை.
ரிசெப்ஷன் என்றால் கூட, நீ தான் நேரில் போய் உறுதி செய்ய வேண்டும்.
OTP யை கேட்டால், அது 100% மோசடி என்பதை மனதில் உறுதிப் படுத்திக் கொள்ளவேண்டும்..
உனக்கு நேர்ந்த கொடுமையான விஷயம் தான். விழிப்புணர்வோடு நாமே தான். இருக்கணும்.
Leave a comment
Upload