ராஷ்மிகா
அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தில் ராஷ்மிகா மந்தனாவின் கதாபாத்திரம் எதிர்மறை சாயல் கொண்டிருக்குமாம். இதற்கான டெஸ்ட் ஷுட்டெல்லாம் முடிந்து விட்டதாம். விரைவில் படப்பிடிப்பு தொடக்கம்.
சம்யுக்தா மேனன்
வாத்தி படத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த நடிகை சம்யுக்தா மேனன். கைவசம் எக்கச்சக்க படங்கள் இருக்கின்றன. இந்தாண்டு எனது ஆண்டாக இருக்கும் என்று சந்தோசமாக சொல்கிறார் நடிகை.
சமந்தா
அமெரிக்காவின் முக்கிய வீதிகளில் இயக்குனர் ராஜ் நிடி மோரு சமந்தா ஜோடியாக சுற்றி வரும் படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து நாங்கள் காதலிக்கிறோம் என்று சொல்லாமல் சொல்கிறார் நடிகை.
நிதி அகர்வால்
நிதி அகர்வால் தனது எக்ஸ் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ஒரு ரசிகர் உங்கள் அம்மாவின் தொலைபேசி எண் சொல்லுங்கள் நம் திருமணம் சம்பந்தமாக அவரிடம் பேச வேண்டும் என்று சொல்ல 'அப்படியா ரொம்ப குறும்பு “ என்று சமாளித்து விட்டார்.
பூஜா ஹெக்டே
கூலி படத்தில் பூஜா ஹெக்டே ஆடியுள்ள 'மோனிகா' பாடல் இணையத்தில் வைரலாகி கொண்டு இருக்கிறது. என்னை ராசி இல்லாத நடிகை என்று சொல்லிக் கொண்டிருந்த தமிழ் சினிமா இனிமேல் என்னை தேடி ஓடி வருவார்கள் என்கிறார்.
ஜெனிலியா
திருமணத்துக்குப் பிறகு திரையுலகில் இருந்து விலகி இருந்த ஜெனிலியா பாலிவுடில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். இது தவிர தெலுங்கு படங்களில் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். பத்தாண்டுக்குப் பிறகு நடிக்க வருகிறேன். ரசிகர்கள் என்னை மறந்து இருப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் அப்படி நடக்கவில்லை என்று பெருமையாக சொல்கிறார் ஜெனிலியா.
ஜான்வி கபூர்
பஞ்சாப்பை சேர்ந்த ஆணுக்கும் தென்னிந்திய பெண்ணுக்கும் இடையிலான காதலை மையமாகக் கொண்ட 'பரம் சுந்தரி' படம் தன்னை தென்னிந்திய சினிமாவில் இழுக்கும் என்று நம்பிக்கையாக இருந்தார். ஆனால் படம் ரிலீஸ் தான் தள்ளிக் கொண்டே போய்க் கொண்டிருக்கிறது.
பிரியாமணி
நான் படத்திற்காக ஹோம் ஒர்க் எல்லாம் செய்ய மாட்டேன். படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் சொல்வதை உள்வாங்கிக் கொண்டு நடிப்பேன் என்கிறார் நடிகை பிரியாமணி.
பிரியங்கா சோப்ரா
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மகேஷ்பாபு உடன் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கிறார் பிரியங்கா சோப்ரா.
போட்டா போட்டி
தமிழ் திரை உலகில் அதிக படங்களில் நடிப்பது யார் என்ற போட்டியில் மமீதா பைஜுவும் காயடுலோஹரும் தான் இருக்கின்றனர். இவர்களில் மமிதா இடைவெளி கிடைக்கும் போது மலையாள படங்களிலும் நடிக்கிறார். இதற்காக கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார் மமீதா.
ரெஜினாகஸண்ட்ரா
ரெஜினாகஸண்ட்ராவை 34 வயதாகிவிட்டதே எப்போது திருமணம் என்று கேட்டால் என் அம்மாவே இதைப்பற்றி கவலைப்படவில்லை உங்களுக்கு எதற்கு இந்த தேவையில்லாத வேலை என்று எள்ளும் கொள்ளுமாய் வெடிக்கிறார் நடிகை. (ஹூம் எங்க கவலை எங்களுக்கு....)
Leave a comment
Upload