தொடர்கள்
அரசியல்
அன்புமணி ராமதாஸ். - தராத பேட்டி - ஜாசன்

20250626092013534.jpeg

நீங்க சரியா மாநிலங்கள வைக்கு போகலைன்னு புள்ளிவிவரம் சொல்லுது?

அப்படி எல்லாம் கிடையாது நான் சபைக்கு போறதுக்குள்ள சபையே ஒத்திவைச்சிராங்க வச்சிருக்காங்க நான் என்ன பண்றது?

உங்க அம்மா மேல தண்ணி பாட்டில்வீசினீங்களா?

செல்லமா தூக்கி போட்டு கேட்ச் பிடிக்க சொன்னேன் அது அவங்க நெத்தியில பட்டுடுச்சு. இவ்வளவு சொல்றாங்களா என் மனைவியை சமைக்க சொன்னாங்க பாத்திரம் தேய்க்க சொன்னாங்க இந்த கொடுமையெல்லாம் நான் என்னைக்கும் வெளியில சொன்னது கிடையாது

சரி எதுக்கு நீங்க ஒட்டு கேட்கும் கருவி வச்சீங்க?

எங்க அப்பாக்கு சக்கர ரத்த கொதிப்பு எல்லாம் இருக்கு அவர் மாத்திரை ஒழுங்கா சாப்பிடுறான்னு தெரியாது போன் போட்டாலும் எடுக்க மாட்டாங்க அவர் மாத்திரை எடுத்து வா சாப்பிடணும் என்ற குரல் கேட்டதும் எனக்கு சந்தோசமாயிடும் அந்தக் குரலுக்காக தான் அந்த ஓட்டு கேட்கும் கருவி வைத்தேன்.

இப்போது முன்னாள் அமைச்சர் முன்னாள் எம்பி என்று ஆகிவிட்டீர்கள். பெரியய்யா முன்னாள் தலைவர் என்று கூட சொல்கிறார் உங்கள் நிலைமை இப்படி ஆயிடுச்ச

நான் தான் வருங்கால முதல்வர் வன்னியர் சமுதாயம் எனக்கு ஓட்டு போடும். தாமரைப்பூ என்னை ஆதரிக்கும்

அதிமுகவுடன் கூட்டணி என்று அமித்ஷா சொல்லி இருக்கிறாரே

அமித்ஷா சொன்னார் அண்ணாமலை சொன்னாரா அண்ணாமலை பாஜகஎன்னைத்தான் ஆதரிக்கிறது

ஆனால் உங்களுக்கு மாம்பழச் சின்னம் கிடைக்காது பெரியவர் கையெழுத்து போட மாட்டாரே பரவாயில்லையா?

மாம்பழம் இல்லாவிட்டால் தாமரை பூ இருக்கிறது தாமரை சின்னத்தில் போட்டி போட்டால் அமலாக்கத்துறை வருமானவரித்துறை சிபிஐ இதெல்லாம் நமக்கு ஆதரவு தரும்