தொடர்கள்
விகடகவியார்
முதல்வருக்கு என்ன ஆச்சு -விகடகவியார்

20250625154909237.jpg

விகடகவியார் உள்ளே நுழைந்ததும் 'முதல்வருக்கு என்ன ஆச்சு எப்படி இருக்கிறார் ? என்று நாம் கேள்விகளை அடுக்கினோம் அந்த விஷயம் நாம் கடைசியில் பேசுவோம்,

எடப்பாடியார் விஷயத்துக்கு வருகிறேன் என்று ஆரம்பித்தார் விகடகவியார்.

எடப்பாடியை இப்பொழுது "ஆங்கில நாளிதழ்கள் எல்லாம் பேட்டி எடுக்க படை எடுக்கின்றன. பேட்டியில், மேடையில் அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் என்கிறார் கூட்டணி ஆட்சி இல்லை என்கிறார். நாங்கள் தேவைப்பட்டால் கூட்டணி வைத்துக் கொள்வோம் வேண்டாம் என்றால் வேண்டாம் தான் என்றும் சொல்கிறார். அண்ணாமலையும் இப்போது மனது மாறி எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி தான்" என்கிறார். ' இதற்குக் காரணம் என்ன ? 'என்று நாம் கேட்டோம் .ஒரு விஷயம் நீங்கள் கவனிக்க வேண்டும் திமுகவை தோற்கடிக்க நாம் தமிழர் கட்சியும் ,தமிழக வெற்றி கழகமும் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டும் என்று தொடர்ந்து சொல்கிறார். விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பாஜகவை விட்டு அதிமுக வெளியே வரவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார். கூடவே எடப்பாடி எங்களுக்கு துணை முதல்வர் பதவி தருவதாக சொன்னார். இதையெல்லாம் பாரதிய ஜனதா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இப்போதைக்கு அவர்கள் அதிமுகவை விட்டு வெளிவர விரும்பவில்லை. எனவே ஆட்சி பங்கு பற்றிய பேச்சு இனிமேல் இருக்காது. தேர்தல் முடிவுகளுக்கு பிறகு நாம் அதை கவனிப்போம் என்கிறார்கள்.

எடப்பாடி பிரச்சாரம் தொடங்கிய அன்று பாரதிய ஜனதா கொடிகளும் பாரதிய ஜனதா தொண்டர்களும் வந்தார்கள். இப்போது எடப்பாடி கூட்டத்தில் அவர்கள் இல்லை அதையும் நாம் கவனிக்க வேண்டும் என்றார் விகடகவியார்.

திருமாவளவன் துணை முதல்வர் பதவி என்கிறார் உண்மையா ?"அதை எடப்பாடி மறுக்கவில்லை என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும்.

திருமாவளவன் தொடர்ந்து 40 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கும் இடத்தில் நாங்கள் இருக்கிறோம் என்கிறார்.

திமுக கூட்டணியில் அவர் தொடர்ந்தாலும் கூட இந்த முறை அவர்கள் கேட்கின்ற அளவுக்கு தொகுதிகளை கொடுப்பதற்கு திருமாவளவன் நிச்சயம் அழுத்தம் தருவார் என்கிறார்கள் "என்ற விகடகவியாரிடம் தமிழக வெற்றி கழகம் நிலைமை என்ன? என்றோம்.

விஜய் கட்சி நிர்வாகிகள் கடுப்பில் இருக்கிறார்கள் ஆட்சியில் பங்கு என்று சொல்லிய பிறகும் கூட்டணிக்கு யாரும் வரவில்லை அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்கிறார்கள். ஆனால், அதிமுகவை விமர்சனம் செய்யக்கூடாது என்கிறார்கள். இப்படி தெளிவில்லாமல் குழப்பத்தில் இருக்கிறார் தளபதி. அவருக்கு சரியான ஆலோசகர்கள் இல்லை என்று அலுத்துக் கொள்கிறார்கள் என்றார் விகடகவியார்.

இப்போது முதல்வர் உடல்நிலை விஷயத்திற்கு வாருங்கள் 'என்றோம். முதல்வர் தொடர்ந்து உடல் பரிசோதனை, நடைப்பயிற்சி என்று கொஞ்சம் ஜாக்கிரதையாகத் தான் தனது உடல் நிலையை பாதுகாக்கிறார். மருத்துவர்கள் ரொம்பவும் அலையக்கூடாது என்று தொடர்ந்து எச்சரிக்கை செய்கிறார்கள் அதையும் மீறி சுற்றுப்பயணம் செய்கிறார். மருத்துவர்கள் கார் பயணத்தை தவிர்க்குமாறு சொன்னதால்தான் தற்சமயம் ரயிலில் பயணிக்கிறார் முதல்வர் இருந்தாலும் ஓய்வு தேவை என்று தொடர்ந்து வலியுறுத்து வருகிறார்கள். அந்த குறிப்பிட்ட தினத்தன்று நடைப்பயிற்சியின் போது லேசாக அவருக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டது. பிறகு நடைப்பயிற்சியை முடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்த பிறகு ஒன்னும் இல்லை. அதன் பிறகு அதிமுகவில் இருந்து வந்த அன்வர் ராஜா கட்சியில் சேர்ந்ததை அறிவாலயத்தில் வரவேற்றார்.

கம்யூனிஸ்ட் தலைவர் சண்முகத்தை சந்தித்து பேசினார். அதன் பிறகும் அவரால் ஒரு மாதிரி மீண்டும் தலைச்சுற்றல் என்று கஷ்டப்பட உடனே அருகில் இருந்த மருத்துவர்கள் அவருக்கு ரத்த அழுத்தம் பார்த்ததை தொடர்ந்து அவரை அப்போலோவில் அனுமதிக்க உடனே அழைத்துச் சென்றார்கள்.

சாதாரண செக்கப் தான் மாலை வந்து விடலாம் என்று தான் நினைத்தார்.

டாக்டர்கள் கட்டாயம் மூன்று நாள் இங்கே ஓய்வு எடுக்க வேண்டும். நிறைய பரிசோதனை செய்ய வேண்டி இருக்கிறது. அதன் பிறகும் வீட்டில் அல்லது இங்கேயே தங்கி கூட ஓய்வெடுக்கலாம் உடனே எல்லாம் சுற்றுப்பயணம் எல்லாம் ஆகாது என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். அவர்கள் குடும்பத்தினரிடமும் மருத்துவர்கள் இதை எடுத்து சொல்லி இருக்கிறார்கள்.

20250626062617405.jpg

முதல்வர் சுற்றுப்பயணம் இனிமேல் கொஞ்சம் கட்டுப்படுத்தப்பட்டு அதற்கு பதில் அந்த வேலையை துணை முதல்வர் செய்வார் என்கிறார்கள் என்று சொல்லிவிட்டு புறப்பட்டார் விகடகவியார்.