தொடர்கள்
விகடகவியார்
தன்கர் ராஜினாமா சர்ச்சை-விகடகவியார்

20250625171146499.jpeg

22-ஆம் தேதி ஜூலை மாதம் மாநிலங்களவை கூடிய போது அவைக்கு தலைமை வகித்தது ஜெகதீப் தன்கர் தான்.

சிறிது நேரத்துக்கு பிறகு மாற்று அவைத்தலைவர்கள் சபையை கொஞ்ச நேரம் நடத்தினார்கள்.

சபை ஆரம்பித்தபோது அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மத்திய அமைச்சர் நட்டா இருவருக்கும் இடையே வாத பிரதிவாதங்கள் நடந்தது. ஒரு கட்டத்தில் நட்டா இந்த அவையில் நான் சொல்வது மட்டும் தான் அவைக்குறிப்பில் ஏறும் என்று சொன்னார். அதை நேரலையில் பார்த்தவர்களுக்கு தெரியும். அப்போதே தன்கர் முகம் ஒரு மாதிரியானது.

மாலை மீண்டும் அவைக்கு தலைமை வகித்தார் தன்கர்.

அப்போது அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை நீக்கக்கோரி 50 எதிர்க்கட்சி எம்பிக்கள் கையெழுத்திட்டு வழங்கிய நோட்டீசைப் பெற்றார்.

சங்கர் கூடவே ராஜ்யசபா செயலாளரிடம் இந்த நோட்டீஸ் குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்தார்.

ஆனால் இரவு 9 மணிக்கு துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

அவரது ராஜினாமாவையும் உடனே ஏற்றுக் கொள்வதாக குடியரசுத் தலைவர் அறிவித்தார். பூரண உடல் நலத்துடன் இருக்க பிரதமர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

காங்கிரஸ் குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் மற்றும் எம்பி ஆன ஜெயராம் ரமேஷ் தங்கள் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் "நேற்று மதியம் 12.30 மணிக்கு ஜெகதீப் தன்கர் மாநிலங்கள் அவையின் அலுவல் ஆய்வு குழுவிற்கு தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் அவைத் தலைவர் ஜே.பி.நட்டா நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜு உள்ளிட்ட பெரும்பாலான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஒரு சிறிய விவாதத்திற்கு பிறகு குழுவின் அடுத்த கூட்டம் மீண்டும் 4:30 மணிக்கு நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டது.

நாலரை மணிக்கு தன்கர் தலைமையில் உறுப்பினர்கள் மீண்டும் கூட்டத்திற்காக கூடினர். அனைவரும் நட்டா மட்டும் ரிஜ்ஜிக்காக காத்திருந்தனர்.

அவர்கள் வரவில்லை மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இரு அமைச்சர்களும் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று தன்கருக்கு தனிப்பட்ட முறையில் தெரிவிக்கப்படவில்லை. இதனால் வருத்தம் அடைந்தார்.

அடுத்த கூட்டத்தை மறுநாள் ஒரு மணிக்கு ஒத்திவைத்தார்.

நேற்று மதியம் ஒரு மணி முதல் நாலரை மணி வரை ஏதோ தீவிரமான ஒன்று நடந்திருக்க வேண்டும். இதன் விளைவாக ஜேபி நட்டா மற்றும் கிரன் ரிஜ்ஜூ வேண்டுமென்றே மாலை கூட்டத்தை தவிர்த்தனர். தற்போது மிகவும் அதிர்ச்சியுட்டும் ஒரு நடவடிக்கையாக ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அவர் தனது ராஜினாமாவிற்கு உடல்நல காரணங்களை குறிப்பிட்டார். இதை நாம் மதிக்க வேண்டும். எனினும் அவர் ராஜினாமா முடிவுக்கு பின்னால் ஆழமான காரணங்கள் உள்ளன.

தன்கர் எப்போதும் 2014-க்கு இந்தியா குறித்து பாராட்டிப் பேசி வந்தார். விவசாயிகள் நலன்களுக்காக வெளிப்படையாக வாதிட்டார். பொது வாழ்வில் கட்சித் தலைவர்களிடையே வளர்ந்து வரும் ஆணவத்தை அவர் விமர்சித்தார், நீதித்துறையில் கட்டுப்பாடு தேவை என்பதை வலியுறுத்தினார் "என ஜெயராம் ரமேஷ் தெரிவித்திருக்கிறார்.

எதிர்க்கட்சிகள் இவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து அது நிராகரிக்கப்பட்டது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இப்போது கூட நீதிபதிபதவி நீக்க தீர்மானத்திற்கு ஒப்புதல் தந்ததை பாஜக விரும்பவில்லை. அவர் ராஜினாமா செய்யவில்லை என்றால் அவரை பதவி நீக்க தீர்மானம் பாஜக கொண்டுவர இருந்தது என்று ஒரு பேச்சு வருகிறது. இதையெல்லாம் மத்திய அமைச்சர் நட்டா மறுத்து இருக்கிறார்.

எது எப்படியோ இரண்டவையிலும் பாஜகவுக்கு பெரும்பான்மை இருக்கிறது பாஜக விரும்பும் ஒருவர் தான் துணை ஜனாதிபதி மாநிலங்களவை தலைவராக வரப்போகிறார் என்பது மட்டும் உண்மை.