சென்னையில் உள்ள லலித் கலா அகாடமியில் ஜூலை 20 முதல் 26 வரை ஒரு வண்ணமயமான கலை கண்காட்சி நடை பெறுகின்றது.. இந்தக் கண்காட்சி, தமிழ்நாட்டின் செழுமையான கலைப் பாரம்பரியத்தையும், நவீன கலைப் படைப்புகளையும் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண்காட்சியின் சிறப்பு அம்சங்கள்
இந்தக் கண்காட்சியில், தமிழ்நாடு மற்றும் தென்னிந்தியாவைச் சேர்ந்த முன்னணி கலைஞர்களின் ஓவியங்கள்இடம்பெறவுள்ளன. பாரம்பரிய கலை வடிவங்களை நவீன தொடுதல்களுடன் இணைக்கும் இந்தப் படைப்புகள், தமிழகத்தின் கலாச்சார பன்முகத்தன்மையை பிரதிபலிக்கின்றன.
இந்தக்கண்காட்சியை பிரபல ஓவியர் மணியம் செல்வன் துவங்கி வைத்தார்.அவர் பேசும்போது
"இந்தக் கண்காட்சி, "கலையில் பன்முகத்தன்மை" என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு, பாரம்பரிய மற்றும் சமகால கலையை ஒருங்கிணைத்து பார்வையாளர்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்குகிறது.கலைஞர்கள் மற்றும் படைப்புகள்
கண்காட்சியில் பங்கேற்கும் கலைஞர்களில், தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ஓவியர்கள் மற்றும் இளம் திறமையாளர்கள் இருக்கிறார்கள். இவர்களின் படைப்புகள், இந்திய கலாச்சாரத்தின் வேர்களையும், இன்றைய சமூக மாற்றங்களையும் பிரதிபலிக்கின்றன. இது இளம் கலைஞர்களை ஊக்குவிக்கும் முயற்சியாக அமைகிறது."என்றார்.
.
இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்து கலைஞர்களுக்கு சிறப்பு செய்து கொடுத்த ஓவியர் மோஹனுடு வை தொடர்பு கொண்டு பேசியபோது, " நிறைய இது போன்ற கண்காட்சிகளை ஏற்பாடு செய்திருக்கோம் , இந்த முறை ஒரு புதுமையாக பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்களை ஓவியத்திற்கு மதிப்பெண் கொடுக்கும்படி செய்திருக்கிறோம், அவர்களே முதல் ஐந்து சிறப்பான ஓவியங்களை ஒட்டு போட்டு தேர்ந்தெடுப்பார்கள். இந்த விஷயத்தை சொன்னவுடன் பலரும் நின்று நிதானமாக பார்வையிட்டார்கள். ஒருவர் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக இருந்து எல்லா ஓவியத்தையும் பார்வை யிட்டு ஒட்டு போட்டார். " அந்த முடிவுகள் இதோ விகடகவி வாசகர்கள் பார்வைக்கு.
நமது குழுமத்தை சேர்ந்த ஓவியர் சிவபாலனின் கைவண்ணமும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அது உங்கள் பார்வைக்கு.
இன்றும் (26/07/2025 ) கண்காட்சி உண்டு.
கண்டு களைத்து ஓவியர்களை உற்சாகப்படுத்துங்கள்,
Leave a comment
Upload