ஊட்டிக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் தவறாமல் விசிட் செய்யும் இடம் பொட்டானிக்கல் கார்டன் .
வரலாற்று சிறப்பு மிக்க இந்த கார்டன் தற்போது பொலிவிழந்து காணப்படுகிறது .
அதே சமயம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரும் போது அனைவரையும் கவர்ந்து இழுக்கும் மிக அழகிய பூங்கா தான் காட்டேரி பார்க் .
இந்த கார்டெனுள் எட்டி பார்த்தோம் . உண்மையில் மிக அழகான பார்க் தான் இது .
மலை சரிவில் பளிச்சென்று பச்சை புல் வெளி அமைக்கப்பட்டுள்ளது .
இந்த பூங்காவின் நுழைவாயிலை பிரிட்டிஷ் ஸ்டைலில் அமைத்துள்ளனர் .
எழில் கொஞ்சும் இயற்கை அழகு சூழப்பட்ட இடத்தில் அமைக்கப்பட்ட பூங்கா இது .
மலை ரயில் இந்த பூங்காவை தொட்டு செல்வது அழகான பூங்காவுக்கு மேலும் மெருகேற்றி உள்ளது .
ரன்னி மேடு ரயில் நிலையத்தின் அருகில் உள்ள காட்டேரி பார்க்கை சற்று ரயில் சுற்றுலா பயணிகள் சுற்றி பார்க்க ரயில் நிறுத்தப்படும் என்று பாரம்பரிய மலை ரயில் தலைவர் நட்ராஜ் தென்னக ரயில்வே துறையிடம் முறையிட ரயில் ஆரம்பத்தில் நின்று சென்றது தற்போது இங்கு நிற்பதில்லை .
இந்த அழகிய பூங்காவை உருவாக்கின ஓய்வு பெற்ற தோட்டக்கலை துறை இணை இயக்குனர் மணியை தொடர்பு கொண்டு பேசினோம் ,
" என் மனதில் இடம்பெற்ற சூப்பர் பார்க் இந்த அழகிய காட்டேரி பார்க் .
2010 ஆம் ஆண்டு நான் குன்னூர் சிம்ஸ்பூங்காவில் பணியாற்றி கொண்டிருந்த போது காட்டேரி தேயிலை பார்ம் என் பராமரிப்பில் இருந்தது .
வாரத்தில் இரண்டு முறை இங்கு விசிட் செய்வது வழக்கம் .
அந்த தேயிலை தோட்டத்தில் சுற்றி வரும்போது மலை ரயில் ஊர்ந்து செல்லும் அழகையும் 'ஜோ' என்று ஓடும் காட்டேரி ஆற்றை ரசித்துள்ளேன் .
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி நோக்கி செல்லும் சுற்றுலா பயணிகள் இங்கு உள்ள டீ கடைகளில் டீ அருந்தி ரிலாக்ஸ் செய்து செல்வதை பார்ப்பேன் .
அப்பொழுது என் மனதில் ஏன் ஒரு அழகான பூங்கா உருவாக்க கூடாது என்று பட்டது .
உடனே அரசிடம் அனுமதி பெற்று மலை சரிவில் 3.5 ஏக்கர் பரப்பளவில் புல் கார்பெட் அமைத்து மலர்கள் , மரங்கள் ஸிரோ ஸ்டாப் நடைபாதை அமைத்து உருவாக்கினோம் .
இது ஒரு சுற்றுலா பயணிகள் ரிலாக்ஸ் செய்யும் அழகிய பிரிட்டிஷ் ஸ்டைல் கார்டனாக உருவானது .
இன்று இந்த கார்டன் சுற்றுலா பயணிகள் மற்றும் ஊட்டிக்கு விசிட் செய்யும் அனைவரையும் வரவேற்று வெல்கம் கொடுக்கும் ஒரு கலர்புல் கார்டனாக திகழ்கிறது என்பது பெருமையான ஒன்று" என்கிறார் .
தற்போது இந்த கார்டெனின் இளம் தோட்டக்கலை அதிகாரியாக பணியாற்றிவரும் ஜெயப்பிரகாஷை தொடர்பு கொண்டு பேசினோம் ,
"தேயிலை பார்மாக இருந்த இந்த இடத்தை 2011 ஆம் ஆண்டு ஒரு அழகிய பூங்காவாக உருவானது . இங்குள்ள புல்வெளி மற்றும் ரெகுலர் மலர்கள் அருமையாக உள்ளது .
ஏப்ரல், மே மாதத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கிறது .
இந்த கார்டெனின் மெயின் அழகே நீலகிரி மலை ரயில் ஊர்ந்து செல்வது தான் .
ரயில் காலை 9.30 மணிக்கு கடந்து செல்லும் .
மாலை 4 மணிக்கு ரயில் கீழே இறங்கி செல்லும் . இந்த இரண்டு நேரத்தில் தான் அழகிய ரயிலை ரசிக்கலாம் .
கடந்த மாதம் முதல் முறையாக மலை பயிர்கள் கண்காட்சி நடத்தினோம் . மிகவும் சூப்பராக அமைந்தது .
சுற்றுலா பயணிகள் மிகவும் ரசித்து செல்பீ எடுத்து எஞ்சாய் செய்தனர் .தினமும் சுற்றுலாக்களின் வருகை வந்த வண்ணம் இருக்கின்றனர் ".
இந்த அழகிய பூங்காவை எந்த சினிமா டைரக்டரும் இதுவரை விசிட் செய்யவில்லை என்பது ஆச்சிரியமான ஒன்று .
பர்லியார் மரப்பலாம் என்று சுற்றி திரியும் யானைகள் ரயில் பாதை வழியாக நடந்து செல்வதை பார்க்க முடிகிறது அதே சமயம் இந்த பூங்காவினுள் நுழைவதில்லை .
தென் மேற்கு பருவமழை ஊட்டி யில் பெய்து கொண்டிருக்க பொட்டானிக்கல் கார்டனுள் சுற்றுலாக்களின் விசிட் குறைவாக இருக்க காட்டேரி பூங்கா பளிச் என்று இருக்க சுற்றுலாக்களின் விசிட் தினமும் தொடர்கிறது ...
ரன்னி மேடு ரயில் நிலையத்தை இணைத்து இந்த பூங்காவை சற்று விரிவு படுத்தினால் பாரம்பரிய ரயில் மற்றும் ரயில் நிலையம் பூங்காவினுள் நிலைத்து இருக்கலாம் .
ரயிலும் பூங்காவினுள் நுழைந்து செல்லும் பிரமிப்பான அனுபவம் கிடைக்கும் .ரயில்வே துறை இந்த மலை ரயில் நிலையங்களில் ஏதேதோ பணிகளை செய்து கொண்டிருக்க ஏன் இந்த அழகான இயற்கை அழகை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கக்கூடாது .
இப்படி பட்ட அழகான பூங்கா மற்றும் ரயில் நிலையம் உலகத்தில் எங்கும் இருக்காது என்கிறார் ஓய்வு பெற்ற தோட்டக்கலை அதிகாரி முருகன் !..
Leave a comment
Upload