தொடர்கள்
அனுபவம்
இந்தியாவின் யூபிஐ (UPI) உலகின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையின் கிங் - பால்கி

20250625122043905.jpg

உலகிலேயே டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் ஒன்பதே வயதான நமது யூபிஐ, நாளொன்றுக்கு சுமார் 640 மில்லியன் பரிவர்த்தனைகளை செய்து வருகிறது. இதன் மூலம் 1958ல் பிறந்த விசா பணப் பரிவர்த்தனை கருவியை பின்னுக்குத் தள்ளியுள்ளது. அதன் ஸ்கோர் 639 மில்லியன் மட்டுமே.

உலக அளவில் 50 % உலக டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை நம்ம யூபிஐ மூலம் தான்.

இந்தியாவை பொறுத்தவரை டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் 85% நம்ம யூபிஐ தான்.

சர்வதேச நாணய நிதியம் (IMF – International Monetary Fund)ம் வேகமான பண பரிவர்த்தனையில் இந்தியாவின் வளர்ச்சியை அங்கீகரித்துள்ளது.

அரபு அமீரகம், சிங்கப்பூர், பூட்டான், நேபாளம், ஸ்ரீலங்கா, ஃப்ரான்ஸ், மௌரீஷீயஸ் என்ற நாடுகளிலும் உபயோகத்தில் உள்ளது.

2025062512212447.jpg

பல பேருக்கு தங்களோட பேங்க் கிளை எங்கு இருக்கிறது என்பதே மறந்து போனது.

கிட்டத்தட்ட தூங்கா பேங்க்.

இந்தியாவின் யூபிஐ (Unified Payments Interface) உலகின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையின் கிங்.