நிமிடத்துக்கு 700 குண்டுகள்.
இந்திய ராணுவத்துக்கு விரைவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் அதிநவீன ஏ.கே.203 ரகத் துப்பாக்கிகள் கிடைக்கப் போகிறது. இது, ரஷ்யாவின் புகழ்பெற்ற கலஷ்னிகோவ் துப்பாக்கி வரிசையில் நவீனப்படுத்தப்பட்ட மாடல் ஆகும். இதில், உலகப் புகழ்பெற்ற ஏ.கே.47 ரகத் துப்பாக்கிகளும் இந்த கலஷ்னிகோவ் துப்பாக்கி ரகம்தான். அதன் மேம்பட்ட மாடலாகவே, இந்த ஏ.கே.203 ரக அதிநவீன துப்பாக்கிகள் இருக்கும்.
இந்த துப்பாக்கிகள், நிமிடத்துக்கு 700 குண்டுகள்வரை சுடும் திறன் கொண்டதாகும். இது 800 மீட்டர் தூரம் வரை துல்லியமாக இலக்கைத் தாக்கும். வழக்கமாக, நாம் இவ்வகை துப்பாக்கிகளை ராணுவம் உட்பட பல்வேறு பாதுகாப்பு படைகளுக்குக் கொடுக்க, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வோம். இம்முறை இந்த அதிநவீன ஏ.கே.203 ரகத் துப்பாக்கிகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.இதுவரை சுமார் 48,000 துப்பாக்கிகள் டெலிவரி செய்யப்பட்டு உள்ளன. இன்னும் ஓரிரு வாரங்களில் மேலும் 7,000 துப்பாக்கிகள், இந்த ஆண்டு இறுதிக்குள் கூடுதலாக 15,000 எண்ணிக்கையில் அதிநவீன ஏ.கே.203 ரகத் துப்பாக்கிகள் ஒப்படைக்கப்படும்.ஏ.கே.203 ரக துப்பாக்கியில் 7.62x39 மி.மீ அளவில் இருக்கும் தோட்டாக்கள் பயன்படுத்தப்படுகின்றன. பாகிஸ்தான் மற்றும் சீனாவின் வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் உள்ள பாதுகாப்பு படை, வீரர்களுக்கு தரும் வகையில் திட்டமிடப்பட்டு உள்ளது.
Leave a comment
Upload