தொடர்கள்
அனுபவம்
ஒரு பெண் இரு கணவர்கள் - மாலா ஶ்ரீ

20250626083720924.jpg

இமாசலப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த பிரதீப் நெகி , கபில் நெகி சகோரர்கள். இவர்கள் இருவரும் ஹட்டி எனும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள். இங்கு ஒரே பெண்ணை 2 சகோதரர்கள் திருமணம் செய்யும் வழக்கம் உள்ளது. அதன்படி, கடந்த சில மாதங்களுக்கு முன் பிரதீப் நெகி -கபில் நெகி சகோதரர்களுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தது.

இவர்கள் இருவருக்கும் குன்ஹாட் கிராமத்தை சேர்ந்த சுனிதா சவுகான் என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் கடும் சுவாரஸ்யத்தையும் அதே சமயம் விவாதத்தையும் எழுப்பியுள்ளது.

மணப்பெண் சுனிதா கூறுகையில், ‛‛எனக்கு யாரும் மன அழுத்தம் தரவில்லை. இத்திருமணம், எனது விருப்பம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

இமாசலப் பிரதேசம் மற்றும் உத்தராகாண்ட் மாநிலங்களில் இன்றளவும் ஒருவர் 2 திருமணம் செய்த கொள்வது வழக்கமாக உள்ளது. இந்த நடைமுறை தற்போது ஓரளவு மறைந்தாலும்கூட, சில கிராமங்களில் காலம் காலமாக தொடர்ந்து வருகிறது. இந்த ஹட்டி பழங்குடியினரை எடுத்து கொண்டால், 2 ஆண்களை ஒரு பெண் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் உள்ளது.

பல கேள்விகள் வரலாம். அதையெல்லாம் மனதோடு புதைத்துக் கொண்டு அடுத்த கட்டுரைக்கு செல்வதை தவிர வேறு வழியில்லை.!!!!