பக்கத்து நிலத்தின்
காணிக்கல் லேசாக
அசைக்கப்படுகிறது!
வரப்புகளும்
சிறிது சிறிதாக வெட்டப்பட்டு
வரம்பு மீறப்படுகிறது!
விஷக் காளான்களுக்கும்
முள் வேலி
அமைக்கப்படுகிறது!
சொட்டு நீருக்காக
இரத்த ஆறு
ஓட வேண்டியிருக்கிறது!
நினைவிருக்கட்டும்....
சிறிய ஆசை
என்பது
பெரிய அவஸ்தை!
பெரிய ஆசை
என்பது
மிகப்பெரிய அவஸ்தை!
***
Leave a comment
Upload