முதல் நாளிலேயே பாராளுமன்றத்தில் அமளி !!
வழக்கமா நடக்கிறது தானே !!
நமது நாட்டின் ராணுவ வலிமை கண்டு உலக நாடுகள் வியந்தன பிரதமர் மோடி பெருமிதம்.
ஆனாலும் ராகுல் காந்தி நம்ப மாட்டேன்னு சொல்றாரே ?
பிரதமர் பதில் சொல்ல விட்டால் பார்லிமெண்ட்டை முடக்குவோம் திமுக.
ஆக முடக்கணுன்ற எண்ணத்தோடு தான் போறீங்க மக்கள் பிரச்சினை பேசுறதுக்கு இல்ல ?
இந்துக்கள் நாலு குழந்தைகள் பெற்றால் இரண்டு லட்சம் வழங்கப்படும் ஸ்ரீராம் சேனா அறிவிப்பு.
இவங்களையெல்லாம் இந்த அமலாக்கத்துறை வருமானத் துறை எல்லாம் விசாரிக்காதோ ?
அதிமுகவின் சிவப்பு கம்பள வரவேற்பு எங்களுக்கு தேவை இல்லை, முன்னாள் எம்பி திருநாவுக்கரசர் பேட்டி.
சும்மா வாங்கன்னு கூப்பிட்டாலே வந்துருவாங்க போல தெரியுது !!
விடுதலை சிறுத்தை கட்சிக்கு துணை முதல்வர் பதவி ஆசை காட்டி அழைக்கிறார் எடப்பாடி தொல்.திருமாவளவன் தகவல்.
தலைவர் எனக்கு என்னமோ மிஸ்டர் ரீலுக்கு போட்டியா வந்துட்டா போல தெரியுது ?
ஆட்சியில் பங்கு தரமாட்டோம் எடப்பாடி திட்டவட்டம்.
ஆட்சிக்கு வந்த பிறகு தானே இதை சொல்லணும் !!
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி இருக்கிறதா, நயினார் நாகேந்திரன்.
இதே கேள்வி அவங்க திருப்பி கேட்டா !!
காமராஜர் சர்ச்சை முடிந்து விட்டது செல்வப் பெருந்தகை.
அறிவாலயித்திலிருந்து அப்படி சொல்ல சொல்லி இருப்பாங்க !!
முதல்வர் வேட்பாளர் பழனிச்சாமி என்பதில் குழப்பம் இல்லை, பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை உறுதி.
நீங்களே இப்படி சொல்றது தான் இப்ப குழப்பமா இருக்கு !!
எடப்பாடி பழனிச்சாமிக்கு முதிர்ச்சியான அரசியல் தேவை இரா.முத்தரசன்
கரெக்ட் நீங்க பணம் வாங்குற மேட்டர் எல்லாம் அவர் சொல்றது ரொம்ப தப்பு !!
Leave a comment
Upload