தொடர்கள்
அரசியல்
கருத்துக்கதிர்வேலன்

20250708182253163.jpeg

எங்கள் கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியதால் ஓட்டு எண்ணிக்கை குறையாது நயினார் நாகேந்திரன்.

கூடாது ....அப்படித்தானே தலைவரே ?

உண்மையான இந்தியராக இருந்தால் இப்படி பேச மாட்டீர்கள் ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.

உங்களுக்கு கொஞ்சம் சந்தேகம் வந்திருச்சா ?

உலகிலேயே தந்தையையே வேவு பார்த்த மகன் அன்புமணி தான் ராமதாஸ்.

சேனல் காரர்களுக்கு அப்பாவும் மகனும் பரபரப்பா ஏதாவது சொல்லிட்டே இருக்காங்க !!

பீகாரில் சொந்த வீடு வைத்திருப்பவர் தமிழ்நாட்டில் எப்படி வாக்காளராக முடியும் பா.சிதம்பரம் கேள்வி.

பிரியங்கா காந்தி எப்படி எம்பி ஆனார் என்று கேட்டால் என்ன பதில் சொல்வீங்க அவங்களுக்கு டெல்லியில் சொந்த வீடு இருக்கே ?

தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பது முதலமைச்சருக்கு தெரியாது எடப்பாடி பழனிச்சாமி.

நீங்க கூட தான் முதல்வரா இருக்கும் போது ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு டிவி பார்த்து தெரிஞ்சுகிட்டேன்னு சொன்னீங்க அவர் டிவி பார்த்து தெரிந்து பாரு ?

ராகுல் தலைமையில் ஏழாம் தேதி இண்டியா கூட்டணி கூட்டம்.

இப்படி ஏதாவது கூட்டம் போட்டா தான் இப்படி ஒரு கூட்டணி இருக்கிறது என்று தெரியும் !!

ஆந்திராவிலும் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் அறிமுகம்.

நீங்களுமா !!

மின் வாகன தலைநகரம் தமிழகம் முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்.

மின்வெட்டு தலைநகரம்ன்னு ஒரு பேச்சு இருக்கு அதையும் கொஞ்சம் கவனிங்க !!

இந்தியாவின் மீது மேலும் வரி அதிகரிக்கப்படும் டிரம்ப்.

அமெரிக்காவின் தேசிய விலங்கு வரி குதிரை போல தெரியுது !!

தொடர் அமைதியால் மசோதாக்கள் கட்டாய நிறைவேற்றம் மத்திய அரசு முடிவு.

உங்களுக்கும் வேற வழி இல்ல பாவம்.

திமுகவுடன் கூட்டணி என்பது வதந்தி ஓபிஎஸ்.

அரசியலில் வதந்தி தான் பெரும்பாலும் உண்மையாகும் !!

நிகழாண்டில் 4 இடங்களில் தடுப்பணை அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு.

ஆமா இந்த ஆண்டு தேர்தல் ஆண்டச்சே !!