'' ஹலோ, சஞ்சாரி யாத்ரா சர்வீஸ்?''
'' என்ன வேணுங்க?''
'' நீங்க அடுத்த மாசம் வட நாட்டு திவ்ய தேச யாத்ரா அரேன்ஜ் பண்ணறீங்கன்னு நியூஸ்ல கேட்டேன். எனக்கு ஒரு சீட் தர்றீங்களா ? உணவு, தங்குமிடம், விமான சேவை, பஸ், ரயில் சேவை, எல்லாம் ஏற்பாடு பண்ணரேள் னு பார்த்தேன்.''
"டாக்டரும் கூட வர்றார்"'
'' எனக்கு உடம்பு ஆரோக்கியத்தை நாராயணன் பார்த்துப்பான் "
'' சௌகர்யமா போயிட்டு வரலாம். உடனே புக் பண்ணுங்க. நீங்க எத்தனை பேர்?''
நான் மட்டும் தான். நாராயண நாம சங்கீர்த்தனம் பாடிண்டு வரலாமோல்யோ ?""
" மற்ற பயணிகள் ஒத்துண்டா பாடலாம்"
"கையிலே தம்பூரா மாதிரி ஒரு வாத்தியம் கூடவே வரும் "
''அதெல்லாம் உங்க சௌகர்யம்"
"மொத்த பேக்கேஜ் கட்டணம் ஜீபே பண்ணிடுங்கோ"
"கோவிந்தா கணக்குலேர்ந்து வந்துடும்''
'ஆமா, எந்த நாட்டுலேர்ந்து பேசறீங்க? 0101010101 ன்னு பெரிய CODE நம்பர் வர்றதே ?"
"தேவ லோகத்துலேர்ந்து... "
"உங்க பெயர்?''
"நாரதர்"
'' நாரதரா!, நீங்க எப்படி? நீங்க மேக மண்டலத்துலே தவழ்ந்தே போயிடுவீங்களே! சரஸ்வதி சபதத்துலே பார்த்திருக்கேனே ! ''
"கோவிடுக்கு பயந்து இந்தியா வந்தேன். இந்தியா safe என்பதால் இப்போ இங்கேயே சுத்திண்டிருக்கேன்"
''வெல்கம் நாரதர்!. நாரதரே! நம்முடன் வருகிறார்னு விளம்பரப் படுத்திடமாட்டேன்? மீதி பத்து சீட்டும் புக் ஆகுமே மளமளன்னு "
மறுநாள் எல்லா பத்திரிகை , டி வியில் விளம்பரம்.
நிறைய தொலைபேசி அழைப்புகள் வரும் என்பதால்,ஸஞ்சாரி யாத்ரா சர்வீஸில் ஒரு டெலிபோன் ஆபரேட்டரை நியமிச்சுட்டார், ஓனர்.
கிளம்புவதற்கு இரண்டு நாள் முன்னர், நாரதர , யாத்ரா சர்வீஸுக்கு போன் போட்டார்.
"என்ன, எல்லாம் ரெடியா.?"
ஓனர்: நீங்களும், நானும் தான் ரெடி. உங்களை யார் வரச்சொன்னா? . எல்லாம் என் தலை எழுத்து. எல்லோரும் தங்கள் டிக்கெட்டை கேன்சல் பண்ணிட்டாங்க. ஏகப்பட்ட நஷ்டம் எனக்கு..."
நாரதர்: என்ன சொல்றீங்க!, எல்லோரும் ஹாப்பியா வருவாங்கன்னு தானே நினைச்சேன்?''
“அது சரி, நீங்க கூட வந்தா, மாமா, மாமிகளோட, பேசி கலகங்கள் உண்டு பண்ணிடுவீங்கன்னு எல்லாருக்கும் பயம். சண்டை போடாம வீடு திரும்ப முடியுமான்னு கலக்கம் வந்துடுத்து எல்லோருக்கும்”.
“பணத்தை செலவு பண்ணி வம்பை விலைக்கு வாங்க வேண்டாம்னு ரீஃபண்ட் கேட்டுட்டாங்க''.
''அட, நாராயணா!, நாரதர் கலகம் நன்மையில் முடியும்னு நீங்க சொல்ல வேண்டியது தானே?''
"சொன்னேனே, கலியுகத்துல அதுக்கெல்லாம் கியாரண்டீ கிடையாது... வீடு ரெண்டு பட்டுட்டா அதோ கதி தான்னு தீர்மானமா இருக்காங்க"
'' சரி, கவலையை விடுங்க, மேல் லோகத்து என் நண்பர்களுக்காக தனியா, ஒரு டூர் அரேஞ் பண்ணுங்க.. நான் சனீஸ்வரன், ராகு, கேது, துர்வாசர், எமதர்மன்... எல்லாரையும் சேர்த்து விடறேன். “
“ஹலோ...ஹலோ ..ஹலோஓஒ "'
மறுமுனையிலிருந்து பதிலே இல்லை.
Leave a comment
Upload