விகடகவியார் உள்ளே நுழைந்ததும் "சத்துமாவு உருண்டை பல இடத்துக்கு அலைந்து திரிகிறீர்கள் சாப்பிடுங்கள், உடம்புக்கு நல்லது.
பக்கத்தில் ஒரு மாமி செய்து வியாபாரம் செய்கிறார் நன்றாக இருக்கும்"என்று ஒரு தட்டில் கொண்டு வந்து வைத்தார் ஆபீஸ் பையன்.
சத்து மாவு உருண்டையை சுவைத்தபடியே "தேர்தல் ஜுரம் இப்போதே எல்லா அரசியல் கட்சித் தலைவருக்கும் வந்துவிட்டது என்று ஆரம்பித்தார் விகடகவியார்.
'தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதம் தானே இருக்கிறது' என்றோம் நாம். ஆமாம் நான் ஓபிஎஸ் விஷயத்தில் இருந்து ஆரம்பிக்கிறேன்.
ஓபிஎஸ்-க்கு கிட்டத்தட்ட பாஜக கதவு மூடிவிட்டார்கள். இப்போதைக்கு பாஜக எடப்பாடி பேச்சை தட்ட விரும்பவில்லை. அதனால் தான் பிரதமரை சந்திக்க அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அவரது அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் விஜய் கட்சியுடன் சேர்வது நல்லது என்று சொன்னார்.
அவசர அவசரமாக இரண்டு முறை நடைப்பயிற்சியின் போதும் ஒருமுறை வீட்டிலும் முதல்வரை சந்தித்தார். அரசியல் பேசவில்லை என்று வெளியில் சொன்னாலும் அரசியல் தான் பேசினார்கள்.
ஓபிஎஸ் தன் ஆதரவாளர்களுடன் பேசிவிட்டு முடிவு சொல்வதாக சொன்னார்" விகடகவியாரிடம்' அரசியல் தான் என்ன பேசினார்கள் அதை சொல்லும் 'என்றோம் நாம்.
அவருக்கு இரண்டு யோசனைகளை சொன்னார் முதல்வர் கட்சியில் சேருங்கள் உங்களுக்கு கௌரவமான பதவி தரப்படும். அப்படி இல்லை என்றால் தனி கட்சி தொடங்கி அதிமுக வேட்பாளர்களை எதிர்த்து எல்லா இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்துங்கள். அதிமுக வாக்குகளை பிரியுங்கள்.
தேர்தல் முடிந்த பிறகு உங்களுக்கு ஏற்ற பதவிக்கு நான் பொறுப்பு செலவெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.
ஆதரவாளர்கள் இந்த இரண்டு யோசனையையும் கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள். ஜெயலலிதா அம்மையார் தான் உங்களை முதல்வர் ஆக்கினார். அவர்கள் திட்டப்படி செய்தால் ஜெயலலிதாவுக்கு நீங்கள் துரோகம் செய்து விட்டீர்கள் என்று தான் அதிமுக பிரச்சாரம் இருக்கும். அது உங்கள் இமேஜ் மேலும் டேமேஜ் செய்யும். நாம் விஜய்யுடன் இணைவோம். அதுதான் நல்லது என்று சொல்லி என்றார்" விகடகவியார்.
விஜய்யிடம் பேசினாரா ? அவர் என்ன சொன்னார் ?' என்று கேட்டோம்.
விஜய் எல்லாம் நாம் ஜனவரி மாதம் பேசி முடிவு செய்யலாம் என்று வாய்தா வாங்கி இருக்கிறார் என்றார் விகடகவியார்.
அதிமுக கூட்டணி நிலைமை இப்போது என்ன? 'என்று கேட்டோம். "நயினார்நாகேந்திரன் தெளிவான அரசியல்வாதி.
திருநெல்வேலியில் அவர் வீட்டில் நூற்றுக்கு அதிகமான சைவ உணவுகள் வழங்கி எடப்பாடியை அசத்தி விட்டார். பாஜகவுக்கு பெரிய ஓட்டு வங்கி எல்லாம் இல்லை அதிமுகவின் தயவில் தான் தான் நாம் ஜெயிக்க முடியும் என்பது தெரிந்து கொண்ட அரசியல் தலைவர் அவர்.
மூத்த தலைவர்கள் அண்ணாமலை உட்பட எல்லோரையும் அந்த விருந்துக்கு அழைத்தார் அண்ணாமலை தவிர மற்ற எல்லா தலைவர்களும் அந்த விருந்தில் கலந்து கொண்டார்கள் என்றார் விகடகவியார்.
இப்போது அடிக்கடி திமுக கூட்டணி தலைவர்கள் முதல்வரை சந்திக்கிறார்கள்.
எல்லாமே தேர்தல் ஜுரம் தான்.
பிரேமலதா விஜயகாந்த் கூட சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறார். பாஜக தலைவரும் திட்டம் போட்டு இருக்கிறார்.
இப்போதைக்கு எடப்பாடிக்கு வரும் கூட்டம் பற்றி திமுக யோசிக்கிறது. அதனால் தான் எடப்பாடியை ரொம்பவும் திட்டுகிறார் முதல்வர் "என்று சொல்லிவிட்டு மிச்சம் இருந்த சத்து உருண்டைகளை முழுங்கிவிட்டு புறப்பட்டார் விகடகவியார்.
Leave a comment
Upload