அடர்ந்த காட்டில் கடந்த 55 வருடமாக உற்ற தோழிகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர் 75 வயது பெண்ணும் 65 வயது பெண்ணும் .
யார் இந்த தோழிகள் என்றால் இருவரும் நீலகிரி தெப்பக்காட்டில் உலா வந்து கொண்டிருக்கும் பிரமாண்ட யானை தோழிகள் என்பது ஆச்சிரியமாக உள்ளது .
முதுமலை தெப்பக்காட்டில் உள்ள 30 வளர்ப்பு யானைகளில் பாமா மற்றும் காமாட்சி என்ற பெண் யானைகள் அனைவரையும் கவர்ந்து வருகின்றனர் .
கடந்த 55 வருடமாக இருவரும் உற்ற தோழிகளாக வலம் வருவது வன உயிரின ஆர்வலர்களை ஈர்த்த ஒன்று .
இந்த அபூர்வ தோழிகளை கவர்ந்த முக்கிய வி வி ஐ பி வனத்துறையின் முதன்மை செயலர் சுப்ரியா சாகு .
50 வருடத்திற்கு முன் பொள்ளாச்சி வன பகுதியில் குறும்பு செய்துகொண்டிருந்த இந்த இரு பெண்களையும் பிடித்து தெப்பக்காட்டு யானைகள் முகாமிற்கு கூட்டிவந்து விட்டனர் .
கடந்த 55 வருடமாக இந்த முகாமில் அனைத்து வேலைகளையும் செய்து வந்தனர் .
இருவரும் இணைந்தே சென்று வருவது உணவு உண்ணுவது என்று பிரியாமல் ஒன்றித்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் .
இருவரும் பிரிந்து சென்றது தங்களின் காதலர்களை பார்க்கமட்டும் தானாம் !.
அடர்ந்த காட்டில் தங்களின் செட்டப்புடன் சுற்றிவிட்டு இருவரும் ஒரு இடத்தில் சந்தித்து தங்களின் இருப்பிடத்திற்கு வந்து விடுவர் என்கின்றனர் .
இவ்விரு தோழிகளையும் தற்போது கண்ணும் கருத்துமாக பார்த்து கொள்வது பாகன் மாரி .
அவரை தொடர்பு கொண்டு பேசினோம் ,
" சிறுவயதில் இருந்தே இருவரும் உற்ற தோழிகள் தான்.
பொள்ளாச்சி வன பகுதியில் இருந்து இருவரையும் இங்கு அழைத்துவந்து ஐம்பது வருடமாக எங்க மூத்த மாவுத்துகள் வளர்த்து வந்தனர் .இன்று சீனியர் யானைகள் இந்த இரு தோழிகளும் .
எங்கு போனாலும் இருவரும் பிரியாமல் தான் செல்வார்கள் .
இரவில் காட்டில் விட்டுவிடுவோம் இரவு முழுவதும் மேய்ந்து விட்டு காலையில் வந்து விடுவார்கள் .
இருபது அடி செயின் காலில் கட்டியிருக்கும் கழுத்தில் மணியிருக்கும் அதனால் எங்கு சென்றாலும் கண்டுபிடித்துவிடுவோம் .
ஆண் நண்பர்களுடன் சுற்றி திரிந்தாலும் காலையில் இருவரும் முகாமிற்கு வந்து சேர்ந்துவிடுவர் .
ஒரு முறை இருவரும் காட்டினுள் மேய்ந்து கொண்டிருக்கும்போது அப்பொழுது இவர்களை பராமரித்து வந்த கோபான் என்ற பாகனை சிறுத்தை தாக்க இரு தோழிகளும் அந்த சிறுத்தையை விரட்டி அடித்து பாகனை காப்பாற்றியது மறக்கமுடியாத ஒன்று .
சாப்பிடும்போதும் சரி ஆற்றில் குளிக்கும்போதும் சரி இருவரும் ஒன்றாக தான் செல்கிறார்கள்.
இருதோழிகளும் 58 வயதை அடைந்தவுடன் ஓய்வு பெற்றுவிட்டர்கள் .
தற்போது வாக்கிங் காட்டினுள் மேய்ச்சல் இருவரும் அவ்வப்பொழுது மீட்டிங் ஓல்ட் பாய் ப்ரெண்ட்ஸ் என்று இவர்களின் ரீட்டையர்ட் லைஃ போய்க்கொண்டிருக்கிறது .
காட்டில் விழும் மரங்கள் வெட்டும் மரங்களை எடுத்துவருவது .
முகாமில் உள்ள மற்ற யானைகளுக்கு உண்ண தழைகள் எடுத்து வருவது என்று ஏகப்பட்ட வேலைகளை செய்துள்ளனர் இருவரும் .
இந்த இணைபிரியா தோழிகள் பாட்டிகளாகவும் உயர்ந்துள்ளனர் .
காமாட்சிக்கு பிள்ளைகள் ஆறு .
பாமாவுக்கு ஐந்து பிள்ளைகள் அவர்கள் வளர்ந்து பெரிய யானைகளாக குட்டிகளை ஈன்று அவர்களும் வளர்ந்து காட்டிற்குள் உலாவிக்கொண்டிருக்கிறார்கள் .
75 வயதை கடந்துள்ள பாமா வயது முப்பு ஏற்பட்டுள்ளது இப்பொழுதெல்லாம் நடையில் தளர்ச்சி ஏற்பட்டுள்ளதை பார்க்கலாம் .
காமாட்சி இன்னும் ஸ்ட்ரோங் லேடி தான் .
அதே சமயம் இருவரின் பல்களும் ஏகப்பட்ட ஸ்ட்ராங் என்கிறார் மாரி .
இருவரும் என் செல்ல பிள்ளைகள் தான் என்னைவிட வயதில் மூத்தவர்கள் இருவரும் நுறு ஆண்டுகள் வாழவேண்டும் என்பது என் ஆசை" என்கிறார் மாரி !
இந்த அபூர்வ தோழிகள் வருடந்தோறும் தெப்பக்காட்டு யானைகள் முகாமில் நடக்கும் விநாயக சதுர்த்தி பூஜையில் முக்கிய வி ஐ பி யானைகள் .
பாமா, காமாட்சி இரு தோழி யானைகளுக்கு பாரத பிரதமர் மோடி நம் முதல்வர் ஸ்டாலின் தெப்பக்காடு விசிடின் போது கரும்பு கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .
Leave a comment
Upload