தொடர்கள்
விளையாட்டு
இந்தியாவின் டபுள் வெற்றி ஹைலைட் கட்டுரை – பால்கி

20250708184257562.jpeg

இந்த ஆண்டர்சன்-டெண்டூல்கர் ட்ராபியின் இங்கிலாந்து - இந்தியா கிரிக்கெட் டெஸ்ட் தொடரின் கடைசி டெஸ்ட்டின் கடைசி நாள்.

இங்கிலாந்து தனது இரண்டாவது இன்னிங்க்ஸை ஆடிக்கொண்டிருந்தது. ஸ்கோர் 339 – 6.

இந்தியா, ஜெயிக்கணும்னா 35 ரன்களுக்குள் இங்கிலாந்தின் நான்கு விக்கெட்டுகளையும் சுருட்டணும்.

இங்கிலாந்து, ஜெயிக்கணும்னா 90 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளும் ஓவர் ஒண்ணுக்கு ஒரு ரன் எடுத்தாலே போதும்.

இது தான் அன்றைய நாளின் நிலை.

ஐந்தாம் நாள் ஆரம்பமாயிற்று.

ஸ்கோர் 339 – 6.

ஆதவன் பளிச்சென்று பிரகாசித்தான்.

இந்த நிலையிலும் மனம் தளராது (அந்த நாலு வீடியோக்களையும் இன்னொரு முறை பாருங்கள்) எங்கேயிருந்து வந்தது இந்த ஆக்ரோஷம்...இந்த இரு வேக பந்து வீச்சாளர்களுக்கு?

இதோ ஏழாவது விக்கெட் போனது - வீடியோ

இதோ எட்டாவது விக்கெட் போனது - வீடியோ

இதோ ஒன்பதாவது விக்கெட் போனது - வீடியோ

இதோ கடைசி விக்கெட் போனது - வீடியோ

ஸ்கோர் 357 இருக்கையில் டங்க் கிருஷ்ணாவினால் பௌல்ட் அவுட்டானார்.

உடைந்த இடக்கையை கழுத்தில் கட்டிக்கொண்டு வோக்ஸ்

20250707173352915.jpg

வலது கையில் பேட்டைப் பிடித்துகொண்டு களமிறகினார். அடுத்த ஆடப்பட்ட 13 பந்துகளில் அவரை ஆடாமல் பார்த்துக்கொண்டார் அட்கின்சன்.

அடுத்த சிராஜின் ஒவரில் அட்கின்சனின் சிக்சர் வெற்றிக்கான இலக்கை இலகுவாக்கிவிட்டது.

7 ரன்கள் எடுத்தால் ஜெயிப்பு என்ற நிலையில் விதித்த படியான 86 ஆவது ஒவரின் முதல் பந்து சிராஜ் அட்கின்சனுக்கு வீச அவரது ஆஃப் ஸ்டம்ப் எகிறியது.

இப்படித்தான் வரலாறு படைக்கப்பட்டது.

ஐந்தாம் நாள் ஹீரோக்கள் நம்ம வேக பந்து வீச்சாளர்களான மொஹம்மத் சிராஜ் பிரசித் கிருஷ்ணாதான் என்பதில் சந்தேகமேயில்லை.

20250707173138996.jpg

[கேப்டன் கில்லுடன் பிரசித் கிருஷ்ணாவும் சிராஜ்ஜும்]

சிராஜுக்கு அவரது சொந்த ஊர்க்காரர் ஓவைசி கொடுத்த, பாஷா! மொத்தத்தையும் ஓடைச்சிட்டியே!! ஷொட்டு தான் சூப்பர்.