
நடிகை சமந்தா இயக்குனர் ராஜ் நிதி மோர் என்பவருடன் கிட்டத்தட்ட லிவிங் டுகெதர் ஸ்டைலில் இருந்தார். இருவரும் காதலர்கள் என்று சொல்லப்பட்டது.
இப்போது கணவன் மனைவி ஆகி விட்டார்கள்.
சமந்தா இயக்குனர் ராஜ் நிதி மோர் திருமணம் ஈஷா அறக்கட்டளையில் நடந்தது என்று அறக்கட்டளை செய்தி குறிப்பு வெளியிட்டிருக்கிறது.
லிங்கா, பைரவி தேவியின் முன்னிலையில் நடந்த பூஜையில் ராஜ் நிதி மோருசமந்தாவின் விரலில் மோதிரம் அணிவிக்கும் படம் இன்ஸ்டாகிராமில் வெளியாகி இருக்கிறது.
தாலிக்கு பதில் கருப்பு மணி கடவுள் உருவம் உள்ள பென்டன்ட் சமந்தா அணிந்திருக்கிறார்.
இந்த திருமணம் பூத சுத்தி திருமணம் என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
பக்தியுடன் இணைந்து சில விசேஷ ஆன்மீக நடைமுறைகளை நம்புபவர்கள் தேர்வு செய்யும் திருமண நடைமுறைதான் பூத சுத்தி திருமணம்.
இது பற்றி ஈஷா சத்குரு இணையத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
பூதசுத்தி திருமணம் என்பது திருமணத்தின் ஒரு பண்டைய யோக செயல்முறை.
இது லிங்க பைரவி பார்வதி தேவியின் ஒரு வடிவம் என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
இந்து மத நம்பிக்கைகள் மற்றும் ஆன்மீகம் படி பூத சுத்தி என்பது, நிலம், காற்று, நீர், நெருப்பு மற்றும் ஆகாயம் எனப்படும் ஐந்து கூறுகளை அமைதிப்படுத்தும் செயல்முறை என்று ஈஷா மைய வலைதளத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இது பற்றி சத்குருவும் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். "இந்தத் திருமணம் பூத சுத்தியை அடிப்படையாகக் கொண்டது.சிந்தனைகள், உடனிருப்பு ,உணர்வுகள், உடல் பொருளியல் உலகம் ஆகியவற்றைக் கடந்து ஒரு வலுவான பிணைப்பை தம்பதியருக்குள் உருவாக்குவது தான் இந்த திருமணத்தின் நோக்கம்.
அந்த ஐந்து தத்துவங்களை எவ்வளவு சமநிலைப்படுத்துகிறோமோ அதைப் நம் வாழ்க்கையின் தரம்இயல்பு ஆகியவை தீர்மானிக்கப்படுகிறது.அந்த நோக்கத்திற்காக செயல்பட்ட முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும் "என்று குறிப்பிட்டிருக்கிறார் சத்குரு.
இந்த திருமணத்தை யார் நடத்தி வைப்பார்கள் என்பது பற்றியும் ஈஷா இணைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பூத சுத்தி திருமணத்தில் சிறப்பு பயிற்சி பெற்ற "சுமங்கலா"என்ற தன்னார்வ தொண்டர்கள் திருமணத்தை நடத்தி வைப்பார்கள். இவர்கள் மஞ்சள் நிற ஆடை அணிந்திருப்பார்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
சமந்தா வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராமிலும் உள்ள மஞ்சள் நிற சேலை அணிந்த ஒரு பெண் சடங்கு செய்யும் புகைப்படமும் வெளியிட்டு இருக்கிறார்? புகைப்படங்களிலும் இந்த திருமணத்தின் கடவுள் பென்டன்ட் அணிவது கட்டாயம்.
பாரம்பரிய தாலியும் மணமகன் மணமகளின் கழுத்தில் கட்டலாம் என்கிறார்கள்.

Leave a comment
Upload