
(1974ல் செம்பை பாகவதருக்கு பக்தர்கள் அஞ்சலி)
இது என்ன சங்கீத உற்சவத்தில் ஒவியர் தேவா என்கின்ற தேவநாதன் என்கிறீர்களா?
சமீபத்தில் குருவாயூரில் அந்த உற்சவத்தில் பங்கேற்று பாடி விட்டு வந்திருகிறார்.


கூடவே அவரது மனைவி பூமகள் தேவநாதனும் பாடியிருக்கிறார்

தான் பாடிய பாடல் குருவாயூரப்பனின் மீது பாடல் வரிகள் அவரே எழுதியதாம்.
பாடிய பாடலும் பாடல் வரிகளும் இதோ:
https://youtu.be/R3mnGQA1Fh4?si=5J5XCXxh9f0o0yHW
பல்லவி
குரு வாயு பகவன் நிறுவிட அமைந்தவன்
குருவாயூர் தல மதில் உறைந்திடும் இறைவன்
அனுபல்லவி
பெரு வாழ்வை அளிக்கவல்ல குருவாயூரப்பன்
பெரும் பிணியும் தீர்க்கவல்ல பரந்தாமன் கண்ணன்
சரணம் 1
ப்ரம்மமுகூர்த்தம் வரும் முன்னர் நிர்மால்யம்
ப்ரம்மாதிதேவரெல்லாம் தினம் வணங்கும் அதிசயம் நாராயணீயம் நாம் அடைந்த அற்புதம் நாராயண பட்டத்ரி நலமடைந்த ஔஷதம்
சரணம்2
மம்மியூர் மகாதேவன் நவின்றிட்டஇடமமர்ந்து
இம்மைக்கும் மறுமைக்கும் அருள்பவன்
துணையிருந்து பாலன்னம் சீவேலி களபத்தில் மகிழ்ந்திருந்து துலாபாரம் ஏற்றிருந்து துயர்நீக்கும் அருமருந்து
செம்பை சங்கீத உத்சவம் பற்றி.....
செம்பை வைத்தியநாத பாகவதரின் சங்கீத சேவையை நினைவுகூறும் வகையில் அவர் ஊரான செம்பையிலும், அவர் அடிக்கடி கச்சேரி செய்த இடமான குருவாயூரிலும் வருடா வருடம் செம்பை சங்கீத உற்சவம் விமரிசையாக நடைபெறுகிறது. குருவாயூரில் கார்த்திகை ஏகாதசி திருவிழாவாக பதினைந்து நாட்கள் நடைபெறும் சங்கீத விழாவில் பிரபலம் நிர்பலம் என்ற பேதமின்றி நிறைய பாடகர்களுக்கு அந்த மேடையில் பாட வாய்ப்பு தருகிறது குருவாயூர் தேவஸ்வம் போர்டு. குருவாயூரில் 1974 லிருந்து நடைபெரும் இந்த உற்சவத்திற்கு இவ்வருடம் தங்க விழாவாண்டு.
1974 ஆம் ஆண்டு, அவரது சீடர்கள் ஆசீர்வதிக்கப்பட்ட இசைக்கலைஞருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இசை விழாவை ஏற்பாடு செய்தனர். இதைத் தொடர்ந்து, குருவாயூர் தேவஸ்வம் ஒவ்வொரு ஆண்டும் விழாவை ஏற்பாடு செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொண்டது. முன்பு மூன்று நாள் விழாவாக இருந்த இந்த விழா, இப்போது 15 நாட்களுக்கு நடத்தப்படுகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வாத்தியக் கலைஞர்கள் உட்பட குறைந்தது 3,000 இசைக்கலைஞர்கள் ஒவ்வொரு ஆண்டும் குருவாயூரப்பனுக்கு முன்பாக நிகழ்ச்சி நடத்துகிறார்கள்.
செம்பை பாகவதர் பயன்படுத்திய 'தம்பூரா' பாலக்காட்டில் உள்ள செம்பையில் உள்ள அவரது மூதாதையர் இல்லத்திலிருந்து குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலுக்கு ஊர்வலமாய் வந்து சேர்ந்த பின் இந்த உற்சவம் தொடங்கும்.
பாகவதருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒரு வருட கால செயல் திட்டத்துடன் சிறப்பு நிகழ்வைக் கொண்டாட முடிவு செய்துள்ளது. பின்னணிப் பாடகர் பி. ஜெயச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை கர்நாடக இசை குறித்த கருத்தரங்கைத் தொடங்கி வைத்தார்.
குருவாயூரப்பனின் தீவிர பக்தரான செம்பை, 1952 ஆம் ஆண்டு தனது குரலை இழந்தபோது, கிருஷ்ணரின் ஆசிர்வாதம் தான் அதை மீண்டும் பெற உதவியது என்று நம்பினார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பாகவதர் இசை நிகழ்ச்சிகளில் இருந்து கிடைக்கும் வருமானத்தில் பெரும் பகுதியை குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணா கோயிலுக்கு நன்கொடையாக வழங்கத் தொடங்கினார்.
"அவர் தனது வாழ்நாளில், குருவாயூர் கோவிலில் குறைந்தது 40 உதயஸ்தமன பூஜைகளை செய்திருப்பார். செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர் மற்றும் எம்.எஸ். சுப்பலட்சுமி போன்ற பிரபல பாடகர்களை கோவிலில் உதயஸ்தமன பூஜை செய்ய அவர் ஊக்குவித்தார்," என்று தேவஸ்வத்தின் முன்னாள் மேலாளர் பரமேஸ்வரன் ஐயர் பகிர்ந்து கொண்டார்.
ஒவ்வொரு ஆண்டும் ஏகாதசிக்கு, குருவாயூர் கோவிலில் பாகவதர் ஒரு இசை நிகழ்ச்சியை நடத்துவார். கே.ஜி. ஜெயன் மற்றும் கே.ஜி. விஜயன் போன்ற புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் கோவிலில் நிகழ்ச்சி நடத்த பாகவதருடன் செல்வார்கள். அப்போது, பகவதி கோவிலுக்கு அருகிலுள்ள கோவிலுக்குள் இசை நிகழ்ச்சி நடக்கும்.
"1973 ஆம் ஆண்டு, அஞ்சம் மாதவன் நம்பூதிரி தலைமையில் பக்தர்களும் இசை சகோதரத்துவமும் அவருக்கு குருவாயூரில் 'அபிநவ தியாகபிரம்மம்' என்ற பட்டத்தை வழங்கினர். அதன் ஒரு பகுதியாக, அவர் 'பஞ்சரத்ன கீர்த்தனை' நிகழ்த்தினார்.
வயலின் கலைஞர் கன்னியாகுமரிக்கு ஸ்ரீ குருவாயூரப்பன் செம்பை புரஸ்காரம் தந்து கௌரவிக்கப்பட்டார்.
வரும் டிசம்பர் 6 ஆம் தேதி, பிரபல பாடகர் டி எம் கிருஷ்ணா மாலை 7 மணிக்கு செம்பை சங்கீதோல்சவத்தில் ஒரு இசை நிகழ்ச்சியை நடத்துகிறார்.
கர்நாடக இசை மேதை செம்பை வைத்தியநாத பாகவதரை

நினைக்கும் போது, எந்தவொரு இசை ஆர்வலருக்கும் குருவாயூரப்பன் பக்தருக்கும் முதலில் நினைவுக்கு வரும் பாடல் 'கருண செய்வான் எந்து தாமசம் கிருஷ்ணா'. அவர் தனது எந்த இசை நிகழ்ச்சிகளிலும் தவறவிடாத பாடல் இதுவாகும், மேலும் அக்டோபர் 16, 1974 அன்று தனது இறுதி மூச்சை விடுவதற்கு முன்பு பூழிக்குன்னு கோவிலில் பாடிய கடைசி பாடலும் இதுவே.
பாடகர் தேவா தனது அனுபவத்தைத் தொடர்கிறார்.....
"கவனிக்க வேண்டிய விஷயம் சிபாரிசு ஏதும் தேவையில்லை. ஆன்லைனில் சங்கீத பயிற்சி சான்றிதழுடன் விண்ணப்பிக்க வேண்டும். அவ்வளவே. இந்த வருடம் எனக்கும் என் மனைவிக்கும் பாடும் வாய்ப்பு கிடைத்திட நவம்பர் 11 அன்று சங்கீத சமர்ப்பணம் செய்தோம்."
"பத்து பாடல்களை தேர்ந்தெடுத்து ஆன்லைன் விண்ணப்பத்தோடு கொடுத்தால் அதில் அவர்கள் ஒன்றை குறிப்பிட்டு அதைப் பாடச் சொல்லி ஈ மெயில் அனுப்பிவிடுவார்கள். நாளும் நேரமும் குறிப்பிட்டுவிடுவார்கள். அந்த நாள் நேரத்தில் அந்த பாடலைப் பாட வேண்டும். மாற்றம் செய்வது முடியாது, என்று தொடர்கிறார்.
நிர்வாகத்தினர் ஏற்பாடுகள் வியக்கும் வண்ணம் இருந்தது. நிறைய வயலின் மற்றும் மிருதங்க வித்வான்கள் பக்கவாத்தியம் வாசிக்க ஆர்வமுடன் அமர்ந்திருக்கின்றனர் பாடகர்களுடன் அணிவகுக்க, என்கிறார்.
இந்த ஒரு பாடல் கச்சேரியில் மூவரணி என்னமோ இருக்கிறது, ஆனால் அந்த கச்சேரி நேரம் வரும் வரை யார் யாருடன் என்பது அவருள் எவருக்குமே தெரியாது. இது தான் கர்நாட இசையின் மகத்துவம். அடிப்படை யாவருக்குமே ஒரே மாதிரி தான் என்பது சிறப்பு.
பக்க வாத்யமும் கோவிலே ஏற்பாடு செய்கிறது. சர்டிபிகேட்டும், பிரசாதமும், ஒவ்வொருவருக்கும் கொடுத்துவிடுகிறார்கள்.

வார்த்தைகளால் விவரிக்க முடியாத இறை அனுபவம். பாடத் தெரிந்த வாசகர்கள் அடுத்த வருடம் முயற்சிக்கலாமே என்ற நேர்மறை உற்சாக தூண்டுதலுடன் கூறுகிறார்.
இருக்காதா பின்னே? இதே போல நம்ம திருவாரூரில் நடக்கும் ஸ்ரீதியாகராஜ பஞ்ச ரத்ன கீர்த்தனை திருவிழாவிலும் பிரபலங்களை மட்டும் கவனித்துக்கொள்ளாது வளர்ந்துவரும் இசை கலைஞர்களையும் செம்பை சங்கீத உற்சவம் மாதிரியில் நடக்கலாமே.

Leave a comment
Upload