
ஒரு பக்கம் அதிக தொகுதி ....ஆட்சியில் பங்கு விஜய்யுடன் கூட்டணி என்று எல்லாம் பேசப்பட்ட காங்கிரஸ் தொகுதி பங்கீடு சம்பந்தமாக ஐவர் குழுவை அமைத்தது அதில் இரண்டு பேர் செல்வப் பெருந்தகை மற்றும் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் தவிர மூன்று பேர் டெல்லி பிரதிநிதிகள்.
இந்த மாதம் மூன்றாம் தேதி முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரிப்பு சால்வை போன்ற சடங்குகள் எல்லாம் முடிந்த பிறகு 40 தொகுதி கேட்டு தொகுதி பட்டியலையும் ஸ்டாலின் வசம் ஒப்படைத்தார்கள்.
அது கிட்டத்தட்ட பாதி தொகுதி ஏற்கனவே திமுக மற்றும் இதர கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்ற தொகுதிகள்.
கூட்டணி பற்றி பேசுவதற்கான குழு என்று டெல்லி தலைமை அறிக்கை வெளியிட்ட போது பொதுவாக கூட்டணி பற்றி என்று இருந்ததால் திமுகவுடன் பேச என்று குறிப்பிடாமல் இருந்ததை அப்போதே திமுக கவனித்து வைத்துக் கொண்டது.
முதலமைச்சர் ஸ்டாலின் நாங்கள் கூட்டணிக்கட்சித் தலைவர்களுடன் பேசுவதற்கான குழுவை இன்னும் அமைக்கவில்லை அந்தக் குழு அமைந்ததும் நீங்கள் அவர்களிடம் பேசிக் கொள்ளுங்கள் என்று பட்டும் படாமல் சொல்லி தப்பித்து விட்டார்.
அப்போது அங்கிருந்த அமைச்சர் நேரு "நாங்கள் எஸ்.ஐ.ஆர் பணியில் தீவிரமாக இருக்கிறோம் .உங்கள் தொகுதியிலும் எங்கள் ஆட்கள் தான் வேலை பார்க்கிறார்கள் நீங்கள் எதுவும் செய்யவில்லை.
உங்கள் தொகுதியில் கூட நாங்கள் பூத் கமிட்டிகள் கூட அமைத்திருக்கிறோம் உங்களுக்காக இப்பவும் நாங்கள் தான் வேலை செய்து கொண்டிருக்கிறோம் இதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்ல "செல்வப் பெருந்தகை, ராஜேஷ்குமார் இருவரும் அசடு வழிய முதலமைச்சர் ஸ்டாலின் புன்னகை பூத்தார்.
அப்போது ஸ்டாலின் இந்த பிரச்சனை எல்லாம் முடிந்து ஜனவரிக்கு பிறகு நாங்க குழு அமைப்போம் நீங்க அவங்க கிட்ட பேசுங்க என்று சொல்லி இருக்கிறார்.
சத்தியமூர்த்தி பவனில் இருந்து வரும் தகவல் வேறு மாதிரி இருக்கிறது. நாங்கள் 70 தொகுதி ஆட்சியில் பங்கு வேண்டும் என்று வற்புறுத்தி இருக்கிறோம்.
இதைக் கூட நாங்கள் கேட்கவில்லை ராகுல் காந்தியுடன் தினந்தோறும் அரசியல் பேசுபவர் தான் கிரீஸ் சோடங்கர் அவர்தான் இந்த கோரிக்கையை வைத்தார் என்கிறார்கள்.
அமைச்சர் நேரு முதலமைச்சரிடம் தொடர்ந்து காங்கிரஸ் நமக்கு எக்ஸ்ட்ரா லக்கேஜ் ஆட்சி அதிகாரத்தில் பங்கு எல்லாம் நாம் தரக்கூடாது அவர்களை இந்த முறை கழற்றி விடுங்கள் எங்கே வேண்டுமானாலும் போகட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று அவரை மூளை சலவை செய்யும் வேலையை ஆரம்பித்திருக்கிறார்.
கூட்டணி ஆட்சி வேண்டாம் ஆட்சியில் பங்கு வாய்ப்பு இல்லை என்பதில் திமுக தலைவர் ஸ்டாலினும் உறுதியாக இருக்கிறார் ..
ஜெயித்தால்..!

Leave a comment
Upload