தொடர்கள்
விகடகவியார்
மீண்டும் ராமதாஸ் vs ராமதாஸ்- விகடகவியார்

20251106081556286.jpg

தேர்தல் ஆணையம் அன்புமணி ராமதாஸ் தான் 2026 வரை தலைவர் என்று டாக்டர் ராமதாஸ் எழுதிய கடிதத்துக்கு பதில் அனுப்பியதும் டென்ஷனில் நிருபர்களை சந்தித்த டாக்டர் ராமதாஸ் தேர்தல் ஆணையத்தையும் அன்புமணி விலைக்கு வாங்கி விட்டார். நான் வயிறெறிந்து சொல்கிறேன் இத்தோடு அன்புமணியின் அரசியல் சகாப்தம் முடிந்து விட்டது "என்று சாபம் விட்டார். அன்புமணியை பொறுத்தவரை சட்டப் பிரச்சினையை அதில் உள்ள நெளிவு சுளிவுகளை எப்படி எதிர்கொள்ளலாம் என்பதற்கு ஆலோசனை சொல்ல வழக்கறிஞர் பாலு அவருக்கு பக்க பலமாக இருக்கிறார். டாக்டர் ராமதாசுக்கு அப்படி யாரும் இல்லை.

தேர்தல் ஆணையத்தின் இந்த கடிதத்தை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றம் போனபோது தேர்தல் ஆணையம் இந்த வழக்கில் சொன்ன கருத்து யோசிக்க வேண்டியது மாம்பழ சின்னத்திற்கு இருவரும் உரிமை கோரினால் நாங்க யாருக்கும் இல்லாமல் செய்து விடுவோம் என்று சொல்லி இருக்கிறார்கள். இதன் நடுவே ஜி கே மணி டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசி இருக்கிறார்.

எடப்பாடியை வழக்கறிஞர் பாலு சந்தித்து பேசி இருக்கிறார்.

நீதிமன்றத்தில் அன்புமணி தரப்பு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் க்கு இப்போது 90 வயது ஆகிவிட்டது கட்சியை அவரால் நடத்த முடியாது அன்புமணி ராமதாஸ் பின்னால் நிர்வாகிகளும் தொண்டர்களும் இருக்கிறார்கள் என்று சொல்லி இருக்கிறார்கள். இது அதிமுக மற்றும் பாஜாவுக்காவுக்கும்மான செய்தியும் கூட. , எடப்பாடி அமித்ஷா இருவரும் ஒருமித்த கருத்தாக அன்புமணி ராமதாஸ் அப்பா ராமதாஸ் இருவரும் ஒருங்கிணைந்தால் மட்டுமே பாட்டாளி மக்கள் கட்சி வாக்கு வங்கி அப்படியே இருக்கும் இருவரும் பிரிந்தால் நமக்கு அவர்கள் சுமை தான் என்பதுதான்.