மிருணாள் தாக்கூர்
மிருணாள் தாக்கூர் தனுஷ் இருவர் பற்றியும் கிசுகிசு வரத் தொடங்கி இருக்கிறது. ஆகஸ்ட் 1-ம் தேதி நடிகைக்கு பிறந்தநாள். பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தனுஷ் நடிகை நடித்த சன் ஆஃப் சர்தார் 2 சிறப்புக் காட்சியை ஒன்றாக சேர்ந்து பார்த்திருக்கிறார்கள், தனுஷ் இந்தியில் நடிக்கும் ' தேரேஇஷ்க்மெயின் தயாரிப்பாளர் தந்த பார்ட்டியில் இருவரும் ஒன்றாக தான் கலந்து கொண்டார்களாம் .
ருக்மணி வசந்த்
தமிழ் சினிமாவில் ருக்மணி வசந்த் இப்போது நல்ல பிஸி நடிகையாகிக் கொண்டிருக்கிறார். விக்ரம் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் ருக்மணி.
ரச்சிதா ராம்
கன்னட சினிமா மூலம் அறிமுகமான நடிகை ரச்சிதா ராம் கூலி படத்தில் நடித்திருக்கிறார் என்பது கூலி பட டிரைலர் மூலம் தெரிந்தது. அவரது கதாபாத்திரம் பற்றி கேட்டால் படத்தைப் பார்த்தால் நீங்களே தெரிந்து கொள்வீர்கள் என்கிறார்.
பூஜா ஹெக்டே
கூலி படத்தில் பூஜாஹெக்டே நடனத்தில் மோனிகா பாடல் ஹிட் என்பது பழைய செய்தி அந்தப் பாடலில் அவர் அணிந்திருந்த சிறப்பு கவுன் இப்போது எல்லோர் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. அந்த கவுன் விலை ஐந்து லட்சம் ஆகும்.
கங்கனரணாவத்
நடிகையும் பாராளுமன்ற உறுப்பினருமான கங்கனா ரணவத்தை ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் பாராட்டுகிறார். வலிமையான பெண் அவருடன் சேர்ந்து நடிக்க விருப்பம் என்றும் கருத்து தெரிவித்திருக்கிறார் துணை முதல்வர்.
ராஷ்மிகா மந்தனா
ராஷ்மிகா நடிக்கும் மைசா படம் ஆக்சன் படம். இதில் நிறைய சண்டைக் காட்சிகள் இருக்குமாம். ஜாக்கி சான் சண்டைக் காட்சிகளை வடிவமைத்த ஸ்டண்ட் நிபுணர் ராஷ்மிகாவுக்கு சண்டை சொல்லிக் கொடுக்கிறாராம்.
ஜான்வி கபூர்
தெலுங்கு சினிமாவின் இப்போதைய பேசும் பொருள் ஜான்வி கபூர் தான் மெழுகு சிலை போல் அழகாக இருக்கிறார் என்கிறார்கள் தெலுங்கு சினிமா தயாரிப்பாளர்கள் இயக்குநர்கள்.
திரிஷா
ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு படத்தில் நடிக்கிறார் சூர்யா. அவருக்கு ஜோடி திரிஷா. இது தவிர தமிழ்தெலுங்கு என இரண்டு மொழியில் உருவாகும் ஒரு படத்தில் இவருக்கு ஜோடி மமீதா பைஜூ. அந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் பவானி ஸ்ரீ. இவர் ஜிவி பிரகாஷின் தங்கை.
ஷாருக்கான் சிறந்த நடிகரா நடிகை ஊர்வசி கேள்வி.
சிறந்த நடிகருக்கான தேசிய விருது ஷாருக்கானுக்கு வழங்கப்பட்டது. ஜவான் என்ற திரைப்படத்திற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது . ஆனால் நடிகை ஊர்வசி எந்த அடிப்படையில் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது ஷாருக்கானுக்கு என்று கேள்வி கேட்கிறார். "இதற்கான அளவுகோல் என்ன? , சிறந்த நடிகரான விஜயராகவனை துணை நடிகர் விருது வழங்க தேர்வு செய்தது ஏன் ? , பூக்காலம் படத்தில் அவர் பல மணி நேரம் மேக்கப் போட்டு கஷ்டப்பட்டு நடித்தார். தமிழில் நான் நடித்த ஜே பேபி படமும் நடிகைக்கான விருது பரிந்துரையில் இருந்தது. ஆடு ஜீவிதம் படத்துக்கு ஒரு பாராட்டு கூட இல்லை. கஷ்டப்பட்டு நடிக்கிறோம். வரி கட்டுகிறோம் நீங்கள் கொடுப்பதை வாங்கிச் செல்ல இது ஓய்வூதியம் கிடையாது. எங்களுக்கு பதில் சொல்ல வேண்டும். மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி இது பற்றி கேள்வி கேட்க வேண்டும் "என்று தேசிய விருது குழுவை கேள்வி மேல் கேள்வி கேட்டு இருக்கிறார் ஊர்வசி.
Leave a comment
Upload