தொடர்கள்
அரசியல்
எதிரிகளை இணைத்த அமெரிக்கா - நமது நிருபர்

20250709002444357.jpeg

பர மண்டலத்தில் இருக்கும் எங்கள் பிதாவே தான் செய்வது இன்னது என்பதை அறியாமல் செய்கிறார் இவர் என்று சொல்லுமளவுக்கு டிரம்பின் நடவடிக்கைகள் இருக்கிறது.

நெட்டில் எங்கு தேடினாலும் இம்சை அரசனின் ஆட்சி பற்றி தான் பற்றி எரிகிறது.

அவர் தொடங்கிய வரியுத்தம் அமெரிக்காவுக்கு நன்மை செய்ததோ என்னவோ, ஆனால் இந்தியா, சீனா, ரஷ்யாவை இணைத்த பெருமை டிரம்புக்குத் தான்.

அமெரிக்க ஊடகங்கள் தலையில் அடித்துக் கொள்கிறதா, அல்லது நம்மூர் ஊடகங்கள் போல துதி பாடுகிறதா என்று திட்டவட்டமாக விரைவில் தெரிந்து விடும்.

இப்போதைக்கு விகடகவிக்கு போட்டியாக முழுவீச்சில் காமெடி ஸ்பெஷல் நடத்திக் கொண்டிருப்பது அமெரிக்க அதிபர் தான்.