தென் மேற்கு ரயில்வேக்கு "கவசம்"
தென்மேற்கு ரயில் பாதை முழுதுமாக, அதாவது 3,692 கி.மீ தொலைவிற்கு, கவச் என்னும் ரயில் பாதை பாது காப்பு அமைப்பு செய்திட முடிவு.
இரண்டு கட்டங்களாக இந்த பணி நடக்க இருக்கிறது. முதல் கட்டமாக 1,568 கி.மீ தொலைவை முடித்திட ரூ.628.63 கோடி செலவாகிறது என கணக்கிடப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் ஒடியாவில் நடந்த பயங்கர ரயில் மோதல்கள் போன்றவை தவிற்கப்படும். நல்லது தானே.
இந்த கவச் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டதாகும் என்பது சிறப்பாகும்.
லோகோ பைலட் தவறும் பட்சத்தில், தானியங்கி பிரேக்குகளைப் பயன்படுத்துவதன் மூலம் குறிப்பிட்ட வேக வரம்பிற்குள் ரயிலை இயக்க இந்த் முறை லோகோ பைலட்டிற்கு உதவுகிறது.
***********************************
உக்ரைனில் ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கரின் ஆர்ட் ஆஃப் லிவிங்க்
மனதளவிலான போர் காயங்களைக் குணமாக்குவதில் ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கரின் ஆர்ட் ஆஃப் லிவிங்க் அமைப்பு தனது வாழும் கலையின் மன அதிர்ச்சி நிவாரண அமர்வுகளின் மூலம் மிகப்பெரிய நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியதை அடுத்து உக்ரைன் நாட்டு ராணுவம் இந்த முறையை அங்கீகரித்ததோடு அல்லாமல் ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கரை கௌரவித்தும் இருக்கிறது.
அங்கங்களிழந்தவரின் மன நிலைக்கு இந்த அமர்வுகள் ஒரு அரு மருந்து தான்.
ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கரின் அமைப்பு அளிக்கும் இம்மாதிரியான நிவாரண அமர்வுகள் உலகளவில் உளவியல் ரீதியாக நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக சிறைக்கைதிகள் தங்களை சமுதாயத்தில் நல்ல குடிமகன்களாக மாற்றி அமைப்பதில் நல்ல சேவை செய்திருக்கிறது.
**********************************************************************************
இந்திய ரயில் பாதை நெட்வொர்க்கில் மிஜோரா மாநிலம்
48 சுரங்கப்பாதைகள் கொண்ட பைராபி – சாய்ரங்க் ரயில் பாதை அமைத்ததின் மூலம் வட கிழக்கு மாநிலமான மிஜோரம் சுதந்த்திரத்திற்குப் பின் இப்போது தான் முதன் முதலாக அகில இந்திய அளவிலான ரயில் பாதை நெட்வொர்க்கில் இணைந்துள்ளது. இதற்கான செலவு ரூ. 8,215 கோடி.
இந்த 51.38 கி.மீ தொலவுள்ள இருப்புப்பாதை மிஜோரத்தின் தலைநகர் ஐசால் நகரை இந்தியாவின் பிரதான ரயில் நெட்வொர்க்குடன் இணத்துவிட்டது. இது தென் கிழக்கு ஆசியாவை ரயில் மற்றும் நெடுஞ்சாலை மூலமும் இணைக்கப்பட்டுவிட்டது எனலாம்.
இதன் மூலம் சமூக பொருளாதார வளர்ச்சி தடையின்றி வேக நடையில் முன்னேரும் என்பது நிச்சயம்.
***************************************************************************************
லால்பாக்ச்சா ராஜா கணபதி
மும்பையில் கண்பதி என்று தான் விநாயக சதுர்த்தியை அழைப்பார்கள். அதிலும் சதுர்த்தி திதியில் ஆரம்பித்து சதுர்த்தசியில் அதாவது, பதினோரு நாட்கள் கொண்டாடுவார்கள். முதல் நாள் கண்பதியை வரவேற்பார்கள் எனில், கடைசி நாளான ஆனந்த சதுர்த்தசியில் அந்த மூர்த்திகளை (சிலைகளை) கடலிலோ அல்லது குளங்களிலோ கரைத்து விடுவர். பெரிய சிலைகளை அந்தந்த ஏரியாக்களில் பெரிய பந்தலிட்டு அலங்காரங்களுடன் அமர்த்துவார்கள். கூடவே அந்த நேரங்களில் நடக்கும் நடந்த நாட்டு நடப்புகளை சித்தரிக்கும் விதமாக, உதாரணத்துக்கு, விண்வெளிப்பயணம், ஆபரேஷன் சிந்தூர் பற்றிய கருத்துகளை காட்சிப்படுத்துவார்கள். புராண கதைகளை சித்திரிப்பதும் உண்டு. மத நல்லிணக்கங்களைத் தூண்டும் நிகழ்வுகள், சுதந்திரப்போராட்ட வீரர்களையும் நினைவு கூறும் விதமாகவும் பந்தலில் காட்சிகளை அமைப்பதுண்டு.
சொல்லப்போனால், சுதந்திரப் போராட்ட சமயத்தில், பால கங்காதர திலகர் இந்த பண்டிகையை பத்தொன்பதாவது நூற்றாண்டின் இறுதிகளில் இந்த மாதிரி மக்கள் கூடும் விதத்தில் சர்வஜனிக் கண்பதி பந்தல்கள் அமைத்து மக்களிடையே சுதந்திர வேட்கையை தந்திரமாக விதைத்து வளர்த்தார் என்பது மறுக்க முடியாத சரித்திரம். இன்றும் அவர் ஆரம்பித்த முதல் கண்பதி மண்டலி மும்பையில் இருக்கிறது.
92 வயதான லால்பாக்ச்சா ராஜா இதோ அருகாமையில் உங்களுக்காக.
பொது தரிசனம், பாதம் தொட்டு தரிசனம், முக தரிசனம் (தூர் தரிசனம்) என்ற வகையில் தரிசனங்கள் பொது ஜனங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூடவே 24 மணி நேர ஆன்லைன் தரிசனம் இருக்காம்.
*************************************************************************************
தெரு நாய்களின் காவல் தேவதை
கோவாவில் மரியா கோம்ஸ் தினமும் 300 தெரு நாய்களுக்கு தேடித்தேடிப் போய் உணவளிக்கிறார்.
இவரது இந்த சேவை அதிகாலை 5 மணிக்கு ஆட்டோவில் தொடங்குகிறது. 22 ஸ்டாப்புகளில் நிறுத்தி நாய் பிடிப்பவர்கள் போலே தேடித் தேடி அன்பின் வலையில் சிக்க வைத்து உணவளிக்கிறார். இவர் தேடுகையில் நாய்கள ஓடுவதில்லை. மாறாய் வாலை ஆட்டிக்கொண்டு இவரளிக்கும் உணவை ஏற்றுக்கொள்கின்றன.
உச்ச நீதிமன்றம் இவர்களுக்கு ஒரு வழி செய்ய ஆணையிட்ட நிலையில் இந்த அன்பொழுகல் வாயில்லா ஜீவன்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.
இரண்டாவது முறையாக மாலை 5 மணிக்கு கோம்ஸ் சைக்கிளில் அடுத்த ரவுண்டுக்கு கிளம்பிவிடுகிறார்.
தினமும் இவருக்காகும் செலவு 30 கிலோ அரிசியும் கோழிக்கறியும் தான்.
எந்த ஜென்மத்து பந்தமோ?
**************************************************************************************
இந்திய கிரிக்கெட் உடையின் ஸ்பான்சர்ஷிப்
கடந்த கால் நூற்றாண்டுகளாக இந்த கிரிக்கெட் உடையின் ஸ்பான்சர்ஷிப் செய்ய்த கம்பெனிகளின் நிலமை இதோ.
அனைத்து கம்பெனிகளும் வீழ்ந்துவிட்டன அவர்களது வியாபார தில்லுமுல்லுகளுக்காக.
*********************************************
Leave a comment
Upload