தொடர்கள்
தொடர்கள்
மஹாபாரத மாந்தர்கள் - குறள் வழி. தமிழ் நந்தி. பாண்டு

2025072921445929.jpg


குந்தியை மணந்த பாண்டு மந்திர ராஜன் மகள் மாத்ரியையும் மணந்தான். குந்திக்கு துர்வாசர் அருளிய மந்திரத்தால்(வரத்தால்) பாண்டவர் தோன்றினார்கள்.

மனைவியர் இருவருடன் இமயமலை சாரலுக்கு சென்றான். பொழுதுபோக்குக்காக வேட்டையாட விரும்பிய பாண்டுவின் அம்பால் இறந்ததோ மான் வேடத்தில் மனைவியுடன் இருந்த இந்தமண் என்னும் முனிவர்!

முனிவரின் சாபத்தை மறந்து மாத்ரியை கண்டு மயங்கிய பாண்டு முயங்கி (தழுவி) பின் விழுந்து உயர்நீத்தான். உடன் கட்டை ஏறினாள் மாத்ரி.

குறளும் பொருளும்

கொல்லாமல் இருப்பதுதான் அறம்; கொல்வதால் மற்ற சிக்கல்கள் எல்லாம் வரும்.

அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்

பிறவினை எல்லாம் தரும் 321

கொல்லாமல் இருப்பவன் அல்ப்பாயிஸாக சாக மாட்டான்.

கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள் மேல்

செல்லாது உயிருண்ணும் கூற்று. 326