தொடர்கள்
விகடகவியார்
அண்ணாமலை என்ன சொன்னார் ?? - விகடகவியார்

20250730051949490.jpg

ஏற்கனவே தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைக்க வேண்டும் என்றும் என்னால் எடப்பாடி வாழ்க என்று எல்லாம் சொல்ல முடியாது என்று பேசி வந்தவர்தான் அண்ணாமலை. அண்ணாமலை தலைவர் பதவியில் இருந்து கழற்றி விடப்பட்டார்.நயினார் நாகேந்திரன் தலைவரானார் .அதிமுக பாஜக கூட்டணி வந்தது. ஆனாலும் சமூக வலைதளங்களில் அண்ணாமலை என் வழி தனி வழி என்று சில ஏடாகூட வேலைகளை செய்து வருகிறாராம். சமீபத்தில் அண்ணாமலை ஆதரவாளர்கள் அண்ணாமலை இப்படி சொல்கிறார் என்று அன்பு கூட்டம் என்ற அமைப்பில் ஒரு கருத்து வந்தது.

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தான் வெற்றி பெறும் விஜயின் தமிழக வெற்றி கழகம் இரண்டாவது இடத்துக்கு வரும். அதிமுக பாஜக கூட்டணி மூன்றாம் இடத்திற்கு போய்விடும் என்பதுதான். இந்த விஷயம் எடப்பாடியின் காதுக்கு போய் சேர்ந்ததும் கோபப்பட்ட அவர் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை தேவையில்லாமல் நாங்கள் பாஜகவை சுமக்கிறோம்.

ஒரே ஒரு அறிக்கை மூலம் கூட்டணி இல்லை என்று என்னால் சொல்லிவிட முடியும் என்று வேலுமணி மூலம் தமிழக பாஜக தலைவரிடம் இந்த தகவலை சொல்ல சொன்னாராம். ஏற்கனவே அண்ணாமலை ஒத்துழையாமை இயக்கம் நடத்துகிறார் என்று டெல்லி தலைவரிடம் புகார் சொல்லியிருக்கிறார் நயினார் நாகேந்திரன். இந்தத் தகவலை அமித்ஷாவின் காதுக்கு தமிழக பாஜக தலைவர் எடுத்துச் செல்ல அதைத்தொடர்ந்து அமித்ஷா அண்ணாமலையை கண்டித்து இருக்கிறார்.

அதனால் தான் எடப்பாடியை முதல்வராக்குவோம் என்று மாற்றிப் பேச வேண்டிய நிலைமைக்கு ஆளானார் அண்ணாமலை.