மீனா
நடிகை மீனா அம்மா வேடத்தில் நடிக்க தயார் என்று இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் நடிகர்களிடம் தொடர்பு கொண்டு பேசுகிறார்.
பகத் பாசில்
வில்லன் வேடத்தில் நடிக்க தயார். ஆனால் படத்தில் வில்லன் முக்கியத்துவம் உள்ளவராக இருக்க வேண்டும் என்கிறார் நடிகர் பகத் பாசில்.
மஞ்சிமா மோகன்
திருமணத்திற்கு பிறகு தன் மனைவி மஞ்சிமா மோகன் வெப் சீரியலில் நடிப்பதற்கு அனுமதி கொடுத்துள்ளார் கவுதம் கார்த்திக்.
நயன்தாரா
சிரஞ்சீவி தனது 157-வது படத்தில் தனது ஜோடியாக நடிக்குமாறு கேட்டுக் கொண்டதால் நயன்தாரா நடிக்கிறார். சிரஞ்சீவி தொடர்ந்து வயசான நடிகர்கள் எல்லாம் என்னோடு ஜோடி சேர வாருங்கள் என்று கூப்பிடுவார்கள் என்று பயப்பட ஆரம்பித்திருக்கிறார் நயன்தாரா.
ஷாருக்கான்
ரஜினியின் அடுத்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார் ஷாருக்கான்.
எஸ்.ஜே.சூர்யா
ஜெயிலர் -2 எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளதாக ஒரு தகவல் வந்திருக்கிறது.
லட்சுமி ராய்
கல்லூரி படிக்கும் காலத்திலேயே மாடலிங் செய்து கொண்டிருந்த லட்சுமி ராய் சினிமாவில் அறிமுகமானார். நடிகர் விக்ரந்துடன் கற்க கசடற என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தார். பின்னார் கவர்ச்சி நாயகியாக அறியப்பட்டார். தற்சமயம் வலைதளத்தில் அடிக்கடி கவர்ச்சி படங்களாக அள்ளி விட்டுக் கொண்டிருக்கிறார்.
தமன்னா
தமிழ், தெலுங்கு, இந்தி முன்னணி நடிகையான தமன்னா சமீபத்திய திகில் படமான 'ஓடெலா-2' வில் நடித்திருந்தார். இந்தப் படம் மிகுந்த வரவேற்பை பெற்றது. இப்போ இன்னொரு திகில் படத்தில் நடிக்க இருக்கிறார் நடிகை தமன்னா. அது ராகினி எம் எம் எஸ் 3' ஆக இருக்கலாம் என்கிறார்கள். இது ராகினி எம் எம் எஸ் தொடரின் மூன்றாம் பாகமாம்.
ஸ்ரீ லீலா
தெலுங்கு சினிமாவில் தனக்கு பிடித்த டான்ஸர் சாய் பல்லவி தான். இதற்கு முன் ராதா என்கிறார் ஸ்ரீ லீலா.
டியுட்
பிரதீப் ரங்கநாதன் மமிதாபைஜு நடித்துள்ள டியுட் படம் தீபாவளிக்கு வெளியாகிறது. இது மட்டுமல்ல பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படமும் தீபாவளிக்கு தான் ரிலீஸ்.
பிரியாலயா
ட்ரெண்டிங் படத்தில் அறிமுகமானார் நடிகை பிரியாலயா கலையரசனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்தப் படம் அவருக்கு அமோக வரவேற்பை தந்தது. சாப்ட்வேர் இன்ஜினியரான பிரியாலயா நான் சிம்புவின் நடிப்பை பார்த்து சினிமாவிற்கு வந்ததாக சொல்கிறார் நடிகை.
Leave a comment
Upload