தொடர்கள்
விகடகவியார்
கதவை மூடிய காங்கிரஸ் - விகடகவியார்

20250730051121134.jpg

கூட்டணி ஆட்சி ஆட்சியில் பங்கு என்று தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் ஆசை வார்த்தைகள் தமிழக காங்கிரஸில் கொஞ்சம் சலசலப்பு ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கூட்டணி அமைந்தால் 50 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் அமர வாய்ப்பு என்றெல்லாம் டெல்லியில் பேசியிருக்கிறார்கள் தமிழகத் தலைவர்கள். இந்தத் தகவல் திமுக தலைவருக்கும் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. இது போதாது என்று ராகுல் காந்திக்கு வேண்டியவர்கள் சிலரிடம் நானும் உங்கள் பேரணியில் கலந்து கொள்கிறேன் என்று விஜய் தகவல் அனுப்பி இருக்கிறார். இவை எல்லாவற்றிற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்க பீகாரில் தேர்தல் ஆணையத்துக்கு எதிர்ப்பான பேரணியில் கலந்து கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் ராகுல் காந்தியை தனியாக சந்தித்தார். அப்போது கனிமொழியும் இருந்திருக்கிறார்.

விஜய் பற்றிய பேச்சை எடுத்ததும் அதெல்லாம் தேவையில்லை திமுகவுடன் தான் கூட்டணி என்று ஏற்கனவே இந்த சர்ச்சைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்து விட்டேன், என்று சொல்ல விஜய்க்கான காங்கிரஸ் கதவை மூடிவிட்டார்கள் என்று தெரிந்து கொண்டதும் நிம்மதியானார் திமுக தலைவர் ஸ்டாலின்.