தொடர்கள்
அரசியல்
கருத்துக்கதிர்வேலன்

2025073004595183.jpeg

காலை உணவு திட்டம், எதிர்கால முதலீடு முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்.

தேர்தலில் ஓட்டு மாறுமா அதை சொல்றாரு !!

மனிதநேய மக்கள் கட்சி உட்பட 6 கட்சிகளுக்கு நோட்டீஸ், கட்சிப்பதிவு ஏன் ரத்து செய்யக்கூடாது தேர்தல் அதிகாரி அனுப்பினார்.

ரத்து செஞ்சா தேர்தலில் நிற்க முடியாது, தொகுதி பங்கீடு தொந்தரவு இருக்காது !!

ஆன்மீகத்துக்கு எதிரான ஆட்சி எனக் கூற நினைத்த நைனார் நாகேந்திரன் அரண்டு போய் உள்ளார் சேகர் பாபு குற்றச்சாட்டு.

திராவிடர் கழக தலைவர் வீரமணி கூட அப்படின்னு சொல்றாங்க ?

கொடிக்கம்பம் அகற்ற உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை.

முதல்ல நீதிமன்றம் கொடிக்கம்பகளை அகற்றியே தீரனும் சொன்னீங்க, அப்புறம் தடை, அப்புறம் தடைநீக்கம், இப்ப தடை. மொத்தத்தில் குழப்புறீங்க !!

பழனிச்சாமி சுற்றுப்பயணத்தால் திமுகவினர் கலக்கத்தில் உள்ளனர் ராஜன் செல்லப்பா.

ஆம்புலன்ஸ் டிரைவர்கள் கூட தான் !!

அமித் ஷா ஆயிரம் முறை வந்தாலும் தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது செல்வப் பெருந்தகை.

தலைவரே புதுசா யோசிங்க நீங்களே இதை ஆயிரம் முறை சொல்லிட்டீங்க !!

எனக்கு ஆறு மொழியில் பேச தெரியும் கமலஹாசன்.

ஆனால் புரியிற மாதிரி பேச தெரியாது அப்படித்தான் நடிகரே !!

தமிழக மக்களுக்கு திமுக துரோகம் செய்துவிட்டது அன்புமணி ராமதாஸ்.

நீங்க உங்க அப்பாக்கு செஞ்ச துரோகம் மாதிரி தானே !!

வாக்கு வங்கி சிதறாமல் இருக்க பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவது தான் நல்லது தொல்.திருமாவளவன்.

திமுக கூட்டணியில் இருந்து கொண்டு அதிமுகவுக்கு பேசும் புது தலைவர் இவர் !!

சிறையில் இருந்தபடி பிரதமர் ஆட்சி செய்யலாமா மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேள்வி.

இவர் எந்த பிரதமர் சொல்றார் என்று தெரியவில்லையே !!

தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் தமிழக பாஜக தலைவர் திட்டவட்டம்.

இதைத்தான் ஏற்கனவே அண்ணாமலை சொல்லிட்டாரே !!

பீகாரில் வாக்குத் திருட்டு ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு.

தேர்தல் ஆணையத்தை டென்ஷன் பண்றதே இவருக்கு வேலை !!