மதுரை மாநாட்டில் நடிகர் விஜய் ஏதோ புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைத்து சிங்கம் வேட்டையாட மட்டும் தான் வெளியே வரும் என்று அவர் சொன்னதை வைத்து சமூக வலைதளத்தில் ஏகத்துக்கு கலாய்க்கிறார்கள். ஆண் சிங்கத்துக்கு இன்னொரு பெயர் சோம்பேறி. அது வேட்டைக்கு எல்லாம் போகாது. பெண் சிங்கம் வேட்டையாடி தரும் அதைத்தான் சாப்பிடும்.
அதேபோல் சிங்கம் செத்ததை சாப்பிடாது என்ற தகவலும் தப்பாம். சிங்கம் செத்தது கிடைத்தால் சாப்பிட்டு விடுமாம். அது இல்லை என்றால் தான் வேட்டையாட போகும் என்று சிங்கம் – விஜய் என்று சமூக வலைத்தளத்தில் ஏகத்துக்கு கில்லி நடிகரை கலாய்க்கிறார்கள். அது மட்டுமல்ல சிங்கம் முயல் மான் என்று பலசாலியாக இல்லாத விலங்குகளைத் தான் வேட்டையாடும் என்றெல்லாம் டிஸ்கவரி சேனலுக்கு இணையாக விஜய் கலாய்க்கப்படுகிறார்.
Leave a comment
Upload