கடந்த வியாழக்கிழமை, விநாயக சதுர்த்தி நாளன்று அஸ்வின் தான் டி20 விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். "ஒவ்வொரு முடிவும் ஒரு புதிய தொடக்கத்தை கொண்டிருக்கும் என்று கூறுவார்கள், ஐபிஎல் கிரிக்கெட் வீரராக எனது நேரம் இன்று முடிவடைகிறது. ஆனால் பல்வேறு நாடுகளில் நடைபெறும் லீக்குகளை விளையாடும் எனது நேரம் இன்று தொடங்குகிறது." என்ற அழகானம், தெளிவான தனது அறிவிப்பின் மூலம் இந்திய கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதை உறுதி செய்துள்ளார். கடந்த ஆண்டு இறுதியில்.டெஸ்ட் மட்டும் ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதை அறிவித்த அஸ்வின், ஐபிஎல் விளையாட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றது நாம் அனைவரும் அறிந்ததே. இவரது இந்த அறிவிப்பிற்கு, அஸ்வினின் மனைவியான ப்ரீத்தி "தங்களின் புதிய முயற்சிகளையும், அதில் நீங்கள் அடையும் துயரங்களையும் காண ஆவலாக உள்ளேன்" என்ற ஒரு உணர்ச்சிபூர்வமான பதிலை பதிவு செய்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினரும் அவர்களது அலைவரிசையில், அஸ்வினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பு சற்றே அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் அமைந்திருந்தாலும், கிரிக்கெட் மீதுள்ள இவரது காதல், தாகம் நிச்சயம், அஸ்வினுக்கு ஒரு புதிய பரிணாமத்தை வழங்கும் என்பதில் ஐயமில்லை.இந்த அறிவிப்பை தொடர்ந்து, இவர் கிரிக்கெட் போட்டியின் வர்ணனையாளராக வருவார் என்று சிலரும், ஐபில் விளையாடும் ஒரு அணியின் பயிற்சியாளராகிவிடுவார் என்று சிலரும் தங்கள் கணிப்பை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இதைப் பற்றி அஸ்வின் கூறுகையில் "நான் இன்னும் கிரிக்கெட் விளையாடவே விரும்புகின்றேன். கவுண்டி கிரிக்கெட், ஹண்ட்ரட் , சிபில் என உலக அரங்கில் நடக்கும் போட்டிகளாக இருந்தாலும் சரி, தமிழ் நாட்டில் நடைபெறும் டிஎன்பிசிஎல், மாவட்டங்களில் நடைபெறும் போட்டிகளாக இருந்தாலும் சரி, அந்த விளையாட்டில் நான் இறங்கி விளையாட வேண்டும். எனக்கு அதுவே மகிழ்ச்சியும் அளிக்கும். என்னுள் இருக்கும் கிரிக்கெட் வீரர் இன்னும் ஒரு இரண்டு ஆண்டுகளாவது இருப்பார்" என்று தனது சேனலில் அறிவித்துள்ளார். அஸ்வின் சிறந்த பேச்சாளர் என்றாலும், இவரது தீர்க்கமான இந்த சிந்தனை, நிச்சயம் அவரை ஒரு உயர்ந்த இடத்திற்கு இட்டுச் செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை.
பிசிசிஐ விதிகளின் படி, இந்திய அணியை சார்ந்த கிரிக்கெட் வீரர் (ஒரு நாள் போட்டியில் பங்கேற்பவர், டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுபவர், டி20/ஐபில் விளையாடும் வீரர் - இதில் ஏதாவது ஒன்றில் பங்குபெறுபவர்) உலக அரங்கில் நடைபெறும் எந்த ஒரு கிரிக்கெட் லீக் போட்டியிலும் பங்கு பெற இயலாது. எனவே அஸ்வினின் இந்த அறிவிப்பு அவரது கட்டுகளை அவிழ்த்து விட்டிருக்கிறது என்றே கூறலாம். இவரைப் போன்றே தினேஷ் கார்த்திக், யுவராஜ் சிங்க், ஷிகர் தவன் என பல வீரர்கள் தங்களது ஓய்வை அறிவித்த பின்னர் உலக அரங்கில் நடைபெறும் பல கிரிக்கெட் லீக் போட்டிகளில் பங்கு பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
அஸ்வின் நடத்தும் யூடிப் சேனலுக்கு பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர், அதில் வரும் குட்டி ஸ்டோரி,அரௌண்ட் தி வேர்ல்ட் ஆஃப் கிரிக்கெட் போன்ற தொடர்ககள் பலராலும் விரும்பி பார்க்கப்படுகின்றது. எனவே, அஸ்வின் இனி என்ன செய்யப்போகிறார் என்பதை விடுத்து என்னென்ன செய்யப்போகிறார் என்பதை காண நாமும் ஆவலாக உள்ளோம்.
வாழ்த்துகள் அஸ்வின்!
Leave a comment
Upload