தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா லைட் பாய்

20250806075930205.jpg

கீர்த்தி ஷெட்டி

தெலுங்கு சினிமாவில் முதல் முதலில் அறிமுகமான கீர்த்தி ஷெட்டி நானி ஜோடியாக ஷ்யாம் சிங்கர் ராய் படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் சாய் பல்லவியும் நடித்தார். ஆனா இந்த படம் சாய் பல்லவிக்கு பெயர் வாங்கி தந்த அளவுக்கு கீர்த்திக்கு இல்லை. இத்தனைக்கும் கீர்த்தி ஷெட்டி இந்த படத்தில் படு கவர்ச்சியாக நடித்தார். ஆனாலும் இப்போது தெலுங்கில் பட வாய்ப்புகள் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. எனவே மேடம் பார்வை இப்போது கோலிவுட் பக்கம் திரும்பி இருக்கிறது. ஆனால் கவர்ச்சியாக எல்லாம் நடிக்க மாட்டாராம்.

20250806075949906.jpg

நிவேதா பெத்துராஜ்

கடந்த சில நாட்களுக்கு முன்பு நிவேதா பெத்துராஜ் தனது இன்ஸ்டாகிராமில் துபாயில் தொழிலதிபராக உள்ள ரஜித் இப்ரானை இவர்தான் என் காதலர் இருவரும் கட்டிப்பிடித்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். பிக் பாஸ் ஜூலியின் முன்னாள் காதலர் இவர் என்ற தகவல் தற்சமயம் வெளியாகி இருக்கிறது.

20250806080010545.jpg

ஜான்வி கபூர்

நடிகை ஸ்ரீதேவி ரஜினிகாந்த் சன்னி தியோல் நடித்த இந்தி படம்'சால் பாஸ் '.இந்த படம் சூப்பர் ஹிட். இந்த படம் விரைவில் ரீமேக் ஆக இருக்கிறது. ஸ்ரீதேவி நடித்த அதே வேடத்தில் ஜான்வி கபூர் நடிக்க இருக்கிறார்.

ஆர்.கே.செல்வமணி

(மன்னிக்கவும். அதென்னவோ லைட் பாய் டைரியில் ஆண்கள் படமே சுலபத்தில் கிடைப்பதில்லை)

"என் முதல் படத்துக்கு சம்பளம் 14 ஆயிரம் ரூபாய் தான். அடுத்த படத்துக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்தார்கள். அதனால் முதல் படத்தில் சம்பளத்திற்கு அலையாதீர்கள். முதல் படத்தின் பட்ஜெட் எவ்வளவோ அதுதான் உங்கள் சம்பளம் என்று நினைத்துக் கொள்ளுங்கள் .என்னை நம்பி ஒரு தயாரிப்பாளர் ஒரு கோடி ரூபாய் போடுகிறார் என்றால் அதுதான் என் சம்பளம் என நினைத்துக் கொள்ளுங்கள். அப்படி நினைத்தால் தான் அடுத்து ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்க முடியும் "என்று ஒரு பட விழாவில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஆர்.கே. செல்வமணி.

20250806080105342.jpg

கல்யாணி பிரியதர்ஷன்

கல்யாணி பிரியதர்ஷன் சூப்பர் உமனாக நடித்த லோகா படம் ஓணம் பண்டிகைக்கு ரிலீஸ் ஆனது. மலையாளம் தமிழ் இரண்டு மொழிகளிலும் இந்த படத்திற்கு அமோக வரவேற்பு. இந்தப் படம் துல்கர் சல்மான் நிறுவனம் தயாரித்திருக்கிறது. விரைவில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் பற்றியும் தகவல் வெளிவரும் என்கிறார்கள்.

20250806080127739.jpg

ராகுல் ப்ரீத் சிங்

நடிகை ராகுல் ப்ரீத் சிங் சமீபத்தில் மும்பை விமான நிலையத்துக்கு வந்திருந்த போது அவர் கழுத்தில் அணிந்திருந்த 'ஸ்டெம் செல்' பேட்ச் பலரது கவனத்தை ஈர்த்தது. ஸ்டெம் செல் பேட்ச் என்பது உடலில் உள்ள செல்களை புதுப்பிக்கவும் செல்களில் ஏதாவது பிரச்சனை இருந்தால் அதை குணப்படுத்தவும் உதவுகின்றன. எனவே இப்போது இந்த படம் வைரல் ஆகிவிட்டது. கூடவே ராகுல்ப்ரீத்சிங்க்கு என்ன ஆச்சு என்ற கேள்வியும் நெட்டிசன்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

20250806080150624.jpeg

தமன்னா

பான் இந்தியா நடிகையான தமன்னா நடிகர் விஜய் வர்மா உடன் ஏற்பட்ட காதல் முறிந்து போனது பழைய செய்தி. இப்போது விஜய் வர்மா, சனா ஷேக் உடன் டேட்டிங்கில் இருக்கிறார். இது பற்றி தமன்னாவிடம் கேட்டபோது "யார் எப்படி போனால் எனக்கு என்ன? "என்று பதில் சொல்லி இருக்கிறார்.

20250806080213479.jpg

பிளாக் மெயில்

ஜிவி பிரகாஷ் குமார், தேஜு அஸ்வினி, பிந்து மாதவி ஆகியோர் நடித்த பிளாக் மெயில் படம் செப்டம்பர் 12-ஆம் தேதி ரிலீஸ்.

20250806080245672.jpg

நிவேதா தாமஸ்

ஜில்லா படத்தில் விஜய் தங்கையாக நடித்த நிவேதா தாமஸ் திடீரென குண்டாகி விட்டார். இப்போது உடற்பயிற்சி எல்லாம் செய்து ஸ்லிம்ஆகிவிட்டேன் என்று புகைப்படங்களை வலைதளத்தில் பகிர்ந்து இருக்கிறார். தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் இனிமேல் அவரை தொடர்பு கொள்ளலாம்.

20250806080311735.jpg

அஞ்சலி

ரொம்ப ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு வெளியான விஷால் அஞ்சலி ஜோடி நடித்த மதகஜராஜா வசூலை வாரி வழங்கியது. எனவே மீண்டும் இந்த ஜோடி இன்னொரு படத்தில் நடிக்க இருக்கிறது. கூடவே இந்த படத்தில் துஷாராவும் இணைகிறார் எனவே கவர்ச்சிக்கு பஞ்சம் இருக்காது என்கிறார்கள்.