தொடர்கள்
அரசியல்
கருத்து கதிர்வேலன்

20250806074552547.jpeg

புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டாலே நிறுவனம் வந்து விடாது எடப்பாடி பழனிச்சாமி.

அண்ணே ஒப்பந்தம் போடாம நிறுவனமும் வராது !!

நடப்பாண்டில் ஆறாவது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது.

என்ன இருந்தாலும் என்ன பாதி நீர் கடலுக்கு தான் போகுது !!

சீக்கிரமே ஹைட்ரஜன் குண்டு வெடிக்கும் ராகுல் காந்தி.

சிவகாசியில் ஏதாவது பட்டாசு கம்பெனியில் வேலைக்கு தலைவர் சேர்ந்துட்டாரா !!

எடப்பாடி பழனிச்சாமி கூட்டத்துக்கு பணம் கொடுத்து ஆட்களை அழைத்து வருகிறார்கள் பிரேமலதா விஜயகாந்த்.

நீங்க சொன்னா கரெக்டா இருக்கும் ஏன்ன நீங்க வாங்கி பழக்க பட்டவர் !!

தமிழகத்தில் பாஜக தேர்தல் முறைகேடுகளில் ஈடுபடலாம் திருமாவளவன்.

ஓ அதனால்தான் அண்ணாமலை எப்படியும் எடப்பாடியை முதலமைச்சர் ஆக்கி திருவோம் என்கிறாரா !!

நம்பகத்தன்மையற்ற எடப்பாடி நம்பி எப்படி கூட்டணி வைக்க முடியும் இரா.முத்தரசன்.

காம்ரேட் சார் வேணா அட்வான்ஸ் 25 கோடி அக்கவுண்ட்ல போட சொல்லவா ? அப்போ நம்பி வருவீங்களா ?

அமெரிக்க வரிவிதிப்பால் ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்படக்கூடாது – விஜய்.

ட்ரம்ப் அங்கிள் கிட்ட நீங்க பேசலாமே தலை !!

தமிழகத்தில் தொழில் தொடங்க வாருங்கள் ஜெர்மனியில் முதல்வர் வேண்டுகோள்.

கூடவே கம்யூனிஸ்ட் யூனியன் எல்லாம் வைக்க மாட்டாங்க ஸ்ட்ரைக் எல்லாம் பண்ண மாட்டாங்கன்னு சொல்லுங்க தலைவரே அப்பதான் பயப்படாம வருவாங்க !!

பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கட்ராமன் பதவி ஏற்றார்.

செல்லாது என்று மேல் கோர்ட்டு கீழ் கோர்ட் எல்லா கோர்ட்டிலும் அவர் மேல பிராது குடுத்துட்டாங்களே !!

2026 தமிழக சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது அமைச்சர் சேகர் பாபு.

அண்ணனுக்கு அருள் வந்துருச்சு ! ஜோசியம் சொல்றாரு !!

இபிஎஸ் வெளிநாட்டு பயணம் போல், என் வெளிநாட்டு பயணம் இருக்காது முதலமைச்சர் ஸ்டாலின்.

அண்ணன் எப்பவுமே முதலீட்டுகளை அள்ளிக்கிட்டு வருவாரு !!

ராஜஸ்தானில் முன்னாள் எம்எல்ஏவுக்கான ஓய்வூதியம் வழங்க கோரி ஜெகதீப்தன்கர் விண்ணப்பம்.

காணவில்லை என்று சொன்னாங்க ? பாவம் ஏழை சாப்பாட்டுக்கே கஷ்டம் ஹெல்ப் பண்ணுங்க !!