தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20250806085802574.jpg

Heading : " டிரம்ப்பின் முட்டாள் தன முடிவால் தவிக்கும் திருப்பூர் " - ஸ்வேதா அப்புதாஸ்

Comment : அமெரிக்க இந்தியா இடையேயான பொருளாதார போரில் பாதிக்கப்படுவது உழைக்கும் வர்க்கமே•

கண்மணி, சென்னை

Heading : அட இதக் கேட்டீங்களா? – பால்கி

Comment : அட இதக்கேட்டீங்களா திரு • பால்கி சார் அவர்கள் தரும் அனைத்து தகவல்களும் அருமை• இரயில்வே துறை எடுக்கும் பாதுகாப்பு பற்றிய தகவல்கள் அனைவருக்கும் தேவை• சுதந்திர த்திற்கும் நம் தலைவர்கள் எடுத்த முயற்சியும், பிள்ளையார் சதுர்த்தி விழாவின் பங்கும் இணைந்து இருந்தது என்ற தகவல் சூப்பர்•

கண்மணி, சென்னை

Heading : வீடு தேடி வரும் சிரிப்பு – பால்கி

Comment : சிரிக்க தயார்• வீடு தேடி வரும் சிரிப்பினை சிரிப்பொலியுடன் வரவேற்போம்

Ujjivanam, Chennai

Heading : வலையங்கம்: தேவையில்லை தனியார் மயம்

Comment : ஜனநாயக நாட்டில் மக்களாகிய நாம் தான் அரசினை தட்டிக்கேட்க வேண்டும்• இதனை பார்க்கும் போது மீண்டும் நாம் அடிமை விலங்கை நமக்கு நாமே பூட்டிக் கொள்ளும் நிலை வந்து விடும்•

கண்மணி, சென்னை

Heading : அஷ்வின் அறிவித்தார் ஓய்வை ! லண்டனிலிருந்து கோமதி

Comment : சிறந்த கிரிக்கெட் வீரர் அஸ்வின் எங்கள் மாம்பலத்திற்கு புகழ் சேர்த்தவர், அவர் எங்கள் வீட்டுப் பிள்ளை, எங்கள் தெருவில் என் குழந்தைகளுடன் சிறு வயதில் விளையாடியவர், அவர் மேலும் பல சாதனைகளை கிரிக்கெட் துறையில் நிகழ்த்துவார், வாழ்க அஸ்வின், வளர்க அவர் கிரிக்கெட் சாதனைகள்•

கண்மணி, சென்னை

Heading : அட இதக் கேட்டீங்களா? – பால்கி

Comment : கிரிக்கெட் உடையின் ஸ்பான்சர்ஷிப் செய்த அனைத்து கம்பெனிகளும் வீழ்ந்துவிட்டன... அவர்களது வியாபார தில்லுமுல்லுகளுக்காக எல்லாவற்றிற்கும் பேராசை தான் அடிப்படை காரணம்..... இது MBA போன்ற மேல் படிப்பு களுக்கு ஒரு ஆராய்ச்சி விஷயமாக எடுத்து கொள்ள வேண்டும்

Sriram Srinivasan, சென்னை

Heading : அட இதக் கேட்டீங்களா? – பால்கி

Comment : கவச் எனும் பாதுகாப்பு கவசம் ஒரு நல்ல விஷயம்.....அது முற்றிலும் நம் நாட்டு தொழில்நுட்ப கட்டமைப்பு என்பது மிகவும் பெருமைப்பட வேண்டிய விஷயம்..... பல்லாயிரம் பேர் வேலை செய்யும் இரயில்வேயில் ஒருவர் செய்யும் சிறு தவறு கூட பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.... ஆகையால் இது ஒரு நல்ல பாதுகாப்பு விஷயம்...👏👏

Sriram Srinivasan, Chennai

Heading : வலையங்கம்: தேவையில்லை தனியார் மயம்

Comment : தனியார் மயமாக்கும் முறை தவறில்லை.. இது ரொம்ப காலமாக இருந்து வருகிறது.. தனியார் நிறுவனங்களுக்கு கான்ட்ராக்ட் கொடுத்ததோடு அதிகாரிகள் வேலை முடியவில்லை..... தவறுகளை சுட்டிக்காட்டி அந்த தனியார் கம்பெனியை தகுந்த நடவடிக்கை எடுக்க தவறியதால் தான் இந்த போராட்டம்...

Sriram Srinivasan, Chennai

Heading : " டிரம்ப்பின் முட்டாள் தன முடிவால் தவிக்கும் திருப்பூர் " - ஸ்வேதா அப்புதாஸ்

Comment : திருப்பூர் தவிப்பு ஒரு பெரிய திண்டாட்டம்... ஆனால் இந்த திண்டாட்டம் உலகளவில் பல நாடுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது... தீர்வு விரைவில் வரும் என வேண்டுவோம்/எதிர்பார்ப்போம்....

Sriram Srinivasan, Chennai

Heading : மிரட்டும் மும்பை பேய் மழை-பால்கி

Comment : இங்கு மட்டும் அல்லாமல் இந்தியா வின் பல இடங்களில் திடிர் மழை (cloud burst) வானத்தை பொத்து கொண்டு கொட்டி தீர்க்கிறது.... இனிமேல் மழை 2.0....தான். இது உலகளவிலும் நடக்கிறது..... சீதோஷ்ண நிலை மாற்றம் மிக முக்கியமான காரணம்.... இனிமேல், அதிகமான நீர் அளவை குறைந்த நேரத்தில் அப்புற படுத்தும் வழிகளை மாநகராட்சி கள் கண்டறிய வேண்டும்....

Sriram Srinivasan, Chennai

Heading : மீண்டும் கல்லூரி வாசல் - பால்கி

Comment : மறக்கமுடியாத நினைவலைகள்.... உங்களுடன் நானும் அதை யோசிக்க வைத்தது இந்த பதிவு 👏👏

Sriram Srinivasan, Chennai

Heading : புற்றுநோய் தடுப்பூசி-வெற்றிகரமாகிறது ரஷ்யாவின் முயற்சி-தில்லைக்கரசிசம்பத்

Comment : முயற்சியின் பாதை சரியாக உள்ளது... ரசாயனம் கலவை இல்லாததால் பக்க விளைவுகள் இருக்க வாய்ப்பு ரொம்பவே குறைச்சல்... அதோடு அவரவர்களுக்கு தகுந்தவாறு தனிப்பட்ட மருந்து .... இதன் தனி சிறப்பு... இதற்கெல்லாம் மேல இலவசமாக கொடுத்தால் நிச்சயமாக பாராட்ட பட வேண்டும் 👏👏

Sriram Srinivasan, Chennai

Heading : சிறுநீரக நோய்களை தீர்க்கும் மூக்கிரட்டை கீரை... - மீனாசேகர்

Comment : இந்த கீரை மூக்கிரட்டை கீரை இல்லை

Sri sabari, erode