தொடர்கள்
சினிமா
குட்டி நட்சத்திரம் - திரிஷா தோசர்

20250826182200380.jpg

71வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா சமீபத்தில் தில்லி விக்யான் பவனில் நடைபெற்றது.. இந்த விழாவில் , தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் இருந்து சிறந்த படங்கள், சிறந்த நடிகர்கள், சிறந்த துணை நடிகர்கள் போன்ற பல பிரிவுகளில் விருது வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கினார்.

12 th Fail சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது . சிறந்த நடிகருக்கான விருதை ஷாருக்கானும் , சிறந்த நடிகைக்கான விருதை ராணி முகர்ஜியும் பெற்றனர் .தாதா சாகேப் பால்கே விருது மோகன்லாலுக்கு தரப்பட்டது .தமிழில் ஜி.வி பிரகாஷ் , எம்.எஸ் பாஸ்கர் ஆகியோர் விருது பெற்றனர். 'பார்க்கிங்' திரைப்படம் தமிழின் சிறந்த திரைப்படமாக விருது வென்றது

இந்த விருது வழங்கும் விழாவில் நான்கு வயது சிறுமி ஒருவர் தேசிய விருது பெற்றிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது . இந்தியாவிலேயே மிகச் சிறிய வயதில் தேசிய விருது பெறும் பெருமைக்கு உரிய அச்சிறுமி த்ரிஷா தோசர் ஆவார்.

20250826182239590.jpg

மராத்திய திரைப்படமான நாள் 2 (naal 2) என்ற திரைப்படத்தில் சிறப்பான விதத்தில் நடித்துள்ள இந்த குழந்தை நட்சத்திரத்துக்கு பாராட்டுக்கள் குவிகின்றன. சுதாகர் ரெட்டியின் இப்படத்தில் சிமி, சைதன்யா ,மணி என்னும் மூன்று குழந்தை பாத்திரங்கள் சிறப்பான நடிப்பைத் தந்துள்ளனர். இவர்கள் மூவரும் விருதுக்குத் தேர்நதெடுக்கப்பட்டுள்ளனர். இதில் சிமி என்னும் ரேவதி பாத்திரத்தில் நடித்த த்ரிஷா தான் மிகக் குறைந்த வயதில் தேசிய விருது பெறுபவர் .

குடும்ப உறவு , சகோதரர் மேல் வைக்கும் பாசத்தை மையக்கருத்துக்களாக வைக்கும் கிராமியப்பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் திரிஷா வெகு அழகாக சிமி என்னும் பாத்திரத்தில் பொருத்திக் கொண்டு , முழு படத்தையும் தன் சிறிய தோள்களில் சுமந்தார். கள்ளங்கபடற்ற , உணர்வு பூர்வமான நடிப்பால் தேசிய விருதை வென்றார் .

இந்தியாவின் , மிகச் சிறிய வயதில் தேசிய விருது வென்ற திரிஷாவை கமல் சார் வீடியோ காலில் அழைத்து பாராட்டினார் .