ஐஸ்வர்யா ராஜேஷ்
கொசு தொல்லை குளிரால் அவதிப்படும் சாலையோர மக்களுக்கு போர்வை வாங்கித் தந்து சமூக சேவை செய்தார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
சாக்க்ஷி அகர்வால்
நடிகை சாக்ஷி அகர்வால் நான் சுத்த சைவம் , நான் ஆர்டர் செய்த உணவில் சிக்கன் பீஸ் இருந்தது. இதற்காக நான் ஸ்விகி நிறுவனத்தின் மீது புகார் அளித்திருக்கிறேன். இதை வலைதளத்தில் பதிவு செய்திருக்கிறார் நடிகை.
ராதிகா சரத்குமார்
சூர்யாவின் 46-வதுபடத்தில் ராதிகா சரத்குமார் சமீபத்தில் இணைந்திருக்கிறார்.
பார்த்திபன்
சமீபத்தில் இட்லி கடை படத்தில் நடிக்கும் நடிகர் பார்த்திபன், இட்லி கடை பிரமோஷன் நிகழ்ச்சியில் பேசும்போது "விஜயம் யார் வேண்டுமானாலும் செய்யலாம் ஜெயம் உங்கள் கையில் தான், 2026-இல் நான் தான் சிஎம் "என்று விஜயை மறைமுகமாக கலாய்த்தார் பார்த்திபன். '2026-இல் நான் தான் சி.எம் ' என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார் பார்த்திபன்.
லோகா
லோகா படத்தில் நடித்த கல்யாணி பிரியதர்ஷன் பிரபல நடிகை லிசி பிரியதர்ஷன் மகள்.
கத்ரீனா கைஃப்
நடிகை கத்ரீனா கைஃப் நிறைய மாத கர்ப்பிணியாக இருப்பதை இன்ஸ்டாவில் போட்டோ வெளியிட்டு அறிவித்திருக்கிறார்.
கீர்த்தி சுரேஷ்
விஜய் தேவரகொண்டாவுடன் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
ரைட்
அஜித் நடித்த சிறுத்தை சிவா இயக்கிய வீரம் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் யுவினா இப்போது ரைட் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இது கமர்சியல் திரிலர் படம் என்கிறார் இயக்குனர் சுப்ரமணியன் ரமேஷ் குமார். இந்த படத்தில் நடித்து அருண் பாண்டியன் நட்டி ஆகியோரும் நடிக்கிறார்கள்.
12 படங்கள்
கடந்த வெள்ளிகிழமை ஜிவி பிரகாஷ் நடித்த பிளாக் மெயில் அதர்வாவின் தணல் உட்பட 12 படங்கள் ரிலீஸ் ஆனது . வசூல் ரசிகர்கள் வருகை இவையெல்லாம் சொல்லிக் கொள்ளும்படி இல்லையாம்.
ஜெயிலர்-2
ஜெயிலர்-2 படப்பிடிப்பு நன்றாக நடந்து கொண்டிருக்கிறது. ஜூன் மாதம் வெளியாகும் என்று தெரிவித்திருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.
சாய் பல்லவி
வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் படத்தில் சாய் பல்லவியை ஜோடியாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. வடசென்னை பெண்ணாக இதில் அவர் நடிக்க இருக்கிறார்.
100 கோடி
பிரபல இந்தி நடிகர் அக்ஷய்குமார் மாத வருமானம் 100 கோடியாம் சினிமாவில் மட்டுமமில்லாமல், விளம்பர படங்களில் அவர் நடிக்கிறார்.
Leave a comment
Upload