கூட்டணியை நம்பி அதிமுக இல்லை எடப்பாடி பழனிச்சாமி.
ஆமாம், அமித்ஷாவை மட்டும் நம்பி தான் இருக்கிறது !!
இனி பாஜக கூட்டணிக்கு செல்ல வாய்ப்பு இல்லை டிடிவி தினகரன் திட்டவட்டம்.
ஆமா விஜய்க்கு நாங்க வாக்கு தந்து விட்டோம் !!
பாஜக கொள்கை எதிரி என்றால் காங்கிரஸ் கொள்கை நண்பனா ? விஜய்க்கு சீமான் கேள்வி.
அரசியலில் விஜய்க்கு வில்லன் சீமான் தான் !!
தமிழகத்தில் பாஜகவால் கால் ஊன்ற முடியாது உதயநிதி ஸ்டாலின் காட்டம்.
தலைவரே இதையே நீங்க ஏன் திரும்பத் திரும்ப சொல்றீங்க சந்தேகமா இருக்கு !!
வாரத்தில் நாலு நாள் தொகுதியில் தங்க வேண்டும் திமுக எம்பிகளுக்கு ஸ்டாலின் உத்தரவு.
ஆமா அப்பதான் வாக்காளர்களுக்கு ஏதோ பார்த்த முகமாய் இருக்கேஎன்று நினைவுக்கு வரும் !!
பாஜகவை நம்பி வந்தவர்கள் பொதுவெளியில் காயப்படுத்தும் வகையில் பேசக்கூடாது அண்ணாமலை கருத்து.
இந்த உபதேசம் யாருக்கோ !!
பாமகவும் சின்னமும் நம்மிடம் தான் உள்ளது டாக்டர் ராமதாஸ்.
உங்க மகன் அவர் கிட்ட இருக்குதா சொல்றாரு !!
நான் எனது கட்சியில் பல தலைவர்களை உருவாக்குவேன் நடிகர் கமலஹாசன்.
அவங்க பாவம் எம்எல்ஏவாக வேண்டும், எம்பி ஆக வேண்டும் என்று தான் உங்ககிட்ட வந்தாங்க , தலைவர் பதவியை வச்சுக்கிட்டு என்ன பண்றது !!
எம்ஜிஆருக்கு பிறகு ஸ்டாலினுக்கு தான் அதிக கூட்டம் கூடுகிறது ஆர் எஸ் பாரதி
கலைஞருக்கு கூட்டம் கூடலை போல தெரியுது அனுபவஸ்த்தரே சொல்றாரே !!
விஜயை டார்கட் செய்வது சரியில்லை புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி.
புரிஞ்சு போச்சு உங்க ரூட் என்ன என்று !!
அதிமுக அலுவலகத்தை டெல்லிக்கு மாற்றிய எடப்பாடி கனிமொழி எம்பி கடும் தாக்கு.
அமித்ஷா பஞ்சாயத்து எல்லாம் டக்கு டக்குனு முடிச்சுடலாம் இல்ல அதுதான் !!
நான் எப்போதும் மக்களுடன்தான் இருக்கிறேன் விஜய்.
அதாவது சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை மட்டும் !!
மக்கள் நீதி மையம் மூலம் எம்எல்ஏ ஆகிவிடலாம் என்று யாரும் வர வேண்டாம் கமலஹாசன்.
ஆமா அவராலேயே அது முடியல !!
Leave a comment
Upload