ஜி.எஸ்.டி மறுசீரமைப்புக்கு தொழில்துறையினர் மற்றும் வணிகர் ஆதரவாகவும் ,சில எதிர்பார்ப்புகளையும் தங்கள் கருத்தாக சொல்லி இருக்கிறார்கள்.
வாகன உதிரி பாகங்களுக்கு 28% இருந்த வரி, இப்போது 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது தொழில் நிறுவனங்களுக்கு நிச்சயம் பலன் அளிக்கும்.
ஜி.எஸ்.டி ஆவணங்களில் ஏற்படும் சிறு சிறு தவறுகளுக்கு அதிக அபராதம் விதிப்பதை ரத்து செய்ய வேண்டும். இதையே காரணமாக வைத்துக் கொண்டு மாநில அரசு அதிகாரிகள் வாகனங்களை மடக்கி பல மடங்கு அபராதம் விதிக்கிறார்கள்.
இது சிறு குறுந்தொழில் நிறுவனங்களுக்கு சிரமத்தை தருகிறது என்கிறார்கள்.
அனைத்து கார வகைகள், உலர் திராட்சை போன்றவற்றிற்கு ஐந்து சதவீதமாக மாற்றப்பட்டதை வரவேற்கிறோம்.
வெள்ளம், கருப்பட்டி, மாவு பொருட்களுக்கு 25 கிலோவுக்கு கீழ் இருந்தாலும் வரி உண்டு என்பதை மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் உணவுப் பொருள் சங்கம் வைத்திருக்கிறது.
கிராப்ட் காகிதம் மற்றும் அட்டைப்பெட்டிக்கு 12 சதவீதமாக உள்ள வரியை ஐந்து சதவீதமாக குறைத்தாலும் காகிதத்துக்கு வரியை குறைக்காமல் அட்டைப்பெட்டிக்கு வரியை குறைத்து இருக்கிறார்கள் என்று சுட்டிக் காட்டுகிறார்கள்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் இந்த மாற்றத்தை வரவேற்கிறார்கள். செயற்கை நூலிழை, துணி ஆகியவற்றிற்கு 12 சதவீதமாக இருந்த வரி ஐந்து சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
செயற்கை நூலிழை ஆடை உற்பத்தி பரவலாக அதிகரிக்கும். சர்வதேச சந்தையில் கூடுதலாக ஏற்றுமதி ஆர்டர்கள் அதிகரிக்க இது உதவும் என்கிறார்கள்.
அதிக அளவு மாற்றங்கள் கொண்டு வரும் போது சில இழப்பீடுகள் இருக்கலாம் சில விடுபட்டிருக்கலாம்.
இவற்றை உரிய முறையில் ஜி.எஸ்.டி கவுன்சிலில் முறையீடு செய்து நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
இதை அரசியல் முடிவாக பார்க்கக் கூடாது. ஜி.எஸ்.டி கவுன்சில் எல்லோருடைய கருத்தையும் கவனமாக கேட்டு அதற்கேற்ற நடவடிக்கையையும் இதுவரை எடுத்திருக்கிறது.
பிரதமரே இந்த மாற்றம் தொடரும் என்று சொல்லி இருக்கிறார், நம்புவோம்.
Leave a comment
Upload